Kidny

Kidny

மியன்மார் முஸ்லிம்களுக்கான ஆதரவுப் பேரணிக்கு அழைப்பு ..


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரமான இன அழிப்புத் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு அமைதி ஆர்ப்பாட்டத்தை அனைத்து ஊர்களிலுமுள்ள பள்ளிவாசல்களிலும் ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை வேண்டுகின்றோம்.


மியன்மார் தூதரகத்திற்கு அருகிலுள்ள தெவட்டகஹா பள்ளியிலிருந்து, தொழுகை முடித்தபின்பு அமைதியான முறையில் ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி ரோஸ்மீட் பிளேஸில் உள்ள குறித்த தூதரகத்திற்குச் சென்று இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு பணிவாக வேண்டுகிறோம்.

கட்சி, அமைப்பு, இயக்க பேதங்களின்றி இதயசுத்தியுடன் இதனைச் செய்வதற்கு அவ்வவ் ஊர்களிலுள்ள அமைப்புகளும் அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும்.

கொழும்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளான சகோதரர்கள் பெளசி, முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், கபீர் ஹாஷிம், ஹலீம், ரவூப் ஹகீம், ரிஷாட் பதியுதீன், அதாவுல்லாஹ், பஷீர் சேகு தாவூத், அமீர் அலி, அலி மெளலானா, அப்துர் ரஹ்மான், முபாரக் மெளலவி போன்றவர்களுடன், மார்க்க இயக்கங்களும், குறிப்பிட மறந்தவர்களும் குறை பாராது வெள்ளிக்கிழமை தெவட்டகஹா பள்ளிக்கு தொழ வருவதுடன், அமைதி ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு தயவாக வேண்டுகிறோம்.

வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிராமல், நம்மால் முடிந்த இதையாவது செய்வோம். 

ஒத்துழைப்பீர் ஒன்றிணைவீர்.

அழைப்பு

அஸ்ஸுஹுர் சேகு இஸ்ஸடீன்

கிழக்கின் எழுச்சி

மியன்மார் முஸ்லிம்களுக்கான ஆதரவுப் பேரணிக்கு அழைப்பு .. மியன்மார் முஸ்லிம்களுக்கான ஆதரவுப் பேரணிக்கு அழைப்பு .. Reviewed by Madawala News on 8/29/2017 02:03:00 PM Rating: 5