Kidny

Kidny

முஸ்லிம் பட்­ட­தா­ரிகள் பழி­வாங்­கப்­பட்­டுள்­ளனர்.


மத்­திய மாகாண ஆசி­ரியர் நிய­ம­னத்­தின்­போது முஸ்லிம் பட்­ட­தா­ரிகள் திட்­மி­டப்­பட்டு பழி­வாங்­கப்­பட்­டுள்­ளனர் என முஸ்லிம் விவ­காரம், தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.


கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்­தின்­போது அமைச்சர் ஹலீம் குறித்த பழி­வாங்கள் குறித்து ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்ளார். 



அவர் மேலும், மத்­திய மாகா­ணத்­தி­லுள்ள பட்­ட­தா­ரி­க­ளி­ட­மி­ருந்து ஆசி­ரியர் நிய­ம­னத்­திற்­காக விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டனர். இதன்­போது தமிழ் மொழி மூலம் 742 பேருக்கு ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­பட்­டது. இதில் 421 தமிழ் பட்­ட­தா­ரி­களும் 321 முஸ்லிம் பட்­ட­தா­ரி­களும் உள்­வாங்­கப்­பட்­டனர். 



தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு கஷ்­டப்­பி­ர­தேசம் மற்றும் தோட்­டப்­பா­ட­சா­லைகள் எனும் அடிப்­ப­டையில் அவ்­வப்­போது நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் பாரி­ய­ளவில் ஆசி­ரியர் வெற்­றிடம் காணப்­படும் முஸ்­லிம்­பா­ட­சா­லை­க­ளுக்கு வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. 



இந்­நி­லையில், 421 தமிழ் ஆசி­ரி­யர்­களில் ஒருவர் கூட முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு நிய­மனம் செய்­யப்­ப­ட­வில்லை. முஸ்லிம் பாட­சா­லை­களில் அதி­க­மான வெற்­றி­டங்கள் இருக்­கின்ற நிலையில் 151 முஸ்லிம் பட்­ட­தா­ரிகள் பழி­வாங்­களின் அடிப்­ப­டையில் தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு நிய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது பார­பட்­ச­மாகும். அத்­தோடு திட்­ட­மி­டப்­பட்ட பழி­வாங்­க­ளாகும். 



முஸ்லிம் பட்­ட­தா­ரிகள் மிக நீண்ட தூரம் பிரயாம் செய்து பணிக்கு செல்ல வேண்­டிய துர்­பாக்­கிய நிலைக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். மூன்று அல்­லது நான்கு பஸ்­களில் மாறிச் செல்­ல­வேண்­டி­யுள்­ளது. அத்­துடன் பிர­யா­னத்­திற்கு மட்டும் ஆறு மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேலாக நேரத்தை செல­வி­ட­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இது பெரும் அநி­யா­ய­மாகும்.



இது­கு­றித்து நானும், மத்­திய மாகண சபை உறுப்­பி­னர்­க­ளான ஜே.ஜெய்­னு­லாப்தீன் (லாபிர் ஹாஜியார்), எம்.ரி.எம். முத்­தலிப், ஹிதாயத் சத்தார் உள்­ளிட்டோர் மத்­திய மாகாண முத­ல­மைச்சர் மற்றும் கல்வித் திணைக்­கள பணிப்­பாளர் உள்­ளி­டோரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்தோம். பாதிக்­கப்­பட்ட பட்­ட­தா­ரி­களை மேன்­மு­றை­யீடு செய்­யு­மாறு அவர்கள் வேண்­டிக்­கொண்­டனர். இதற்­க­மைய ஓரிரு பட்­ட­தா­ரி­க­ளுக்கு இட­மாற்றம் வழங்­கப்­பட்­டாலும் அது திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை என அமைச்சர் ஹலீம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.



இதன்போது குறித்த விடயங்களை எழுத்து மூலமாக தருமாறு ஜனாதிபதி அமைச்சர் ஹலீமிடம் தெரிவித்தார். இதற்கமைய நேற்றுமுன்தினம் தினம் அமைச்சர் ஹலீம் மத்திய மாகண முஸ்லிம் பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஜனாதிபதிக்கு எழுத்து மூல அறிக்கையொன்றை சமர்பித்தார். 

முஸ்லிம் பட்­ட­தா­ரிகள் பழி­வாங்­கப்­பட்­டுள்­ளனர். முஸ்லிம் பட்­ட­தா­ரிகள் பழி­வாங்­கப்­பட்­டுள்­ளனர். Reviewed by Madawala News on 8/25/2017 07:31:00 PM Rating: 5