Kidny

Kidny

ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை பணத்தில் ஒரு மில்லியன் டொலர் புத்த பெருமான் பிறந்த மண்ணுக்கு அன்பளிப்பு ; பிரதமர் அறிவிப்பு ..


ஹம்பந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியாதால் கிடைக்கும் பணத்தில் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை கபில வஸ்துபுர தொல்பொருள் புனர்நிர்மாண பணிகளுக்கு நேபாலுக்கு வழங்குவதாக பிரதமர் நேற்று அறிவித்தார்.


அனுராதபுர கல்னேவ பிரதேச புத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனை அறிவித்துள்ளார்.

தற்போது கபில வஸ்துபுர தொல்பொருள் ஆராய்ச்சி புனர்நிர்மாண பணிகள் தற்போது நேபாலில் இடம்பெறுகிண்றன.இதற்காக ஜப்பான் நாடு நிதி உதவி வழங்கியுள்ளது.எம்மிடம் நீதி கோரினார்கள் நாமும் 2017-18 வருடங்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளோம் என குறிப்பிட்டார்.

நாட்டிற்க்கு பெரும் சுமையாக இருந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ததில் எமக்கு 1100 மில்லியன் டொலர் கிடைக்கிறது அதில் ஒரு மில்லியனை நாம் பௌத்த பொருமான் பிறந்த மண்ணுக்காக வழங்கவுள்ளோமென அவர் மேலும் குறிப்பிட்டார்.


ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை பணத்தில் ஒரு மில்லியன் டொலர் புத்த பெருமான் பிறந்த மண்ணுக்கு அன்பளிப்பு ; பிரதமர் அறிவிப்பு .. ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை பணத்தில் ஒரு மில்லியன் டொலர் புத்த பெருமான் பிறந்த மண்ணுக்கு அன்பளிப்பு ; பிரதமர் அறிவிப்பு .. Reviewed by Madawala News on 8/01/2017 02:23:00 PM Rating: 5