tg travels

உங்களுக்கு என்ன அமைச்சு வேண்டும் ? நான் தருகிறேன் ..


என்னை ஜனாதிபதியாக்க நீங்கள் எனது கெம்பெயின் மெனேஜராக செயற்பட்டீர்கள் உங்களுக்கு என்ன அமைச்சு வேண்டும் கேளுங்கள் என ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன முன்னாள் நீதி அமைச்சரிடம் வினவியுள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.


கடந்த செவ்வாய் இரவு ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் சந்தித்த முன்னாள் நீதி அமைச்சரிடம் ஜனாதிபதி இவ்வாறு வினவியுள்ளார்.

என்னை ஜனாதிபதியாக்க நீங்கள் எனது கெம்பெயின் மெனேஜராக செயற்பட்டீர்கள் உங்களை நீதி அமைச்சில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி கோருகிறது.

உங்கள் கட்சி உங்களை நீக்குமாரு கேரும் போது எனக்கு எதுவும் செய்ய முடியாது ஆனால் உங்களுக்கு வேறு என்ன அமைச்சு வேண்டும் கேளுங்கள் நான் பெற்றுத்தருகிறேன் என ஜனாதிபதி வினவியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த முன்னாள் நீதி அமைச்சர்,

நீதி அமைச்சராக இருக்க எனக்கு தகுதியில்லை என்றால் இந்த அரசாங்கத்தில் வேறு அமைச்சையும் பொறுப்பேற்க எனக்கு தகுதியில்லை என்றே அர்தம்.

அன்று மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் எனக்கு கிடைத்த அமைச்சை தூக்கி வீசிவிட்டு வந்த நான் இப்போது இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பிழைகளை விமர்சனம் செய்தேன்.

எதிர்காலத்தில் நான் ஒரு சுயாதீன உறுப்பினராக செயல்படுவேன்.உங்களுக்கு நான் எனது ஆதரவை தொடர்ந்து வழங்குவேன் என ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் ஜனாதிபதியினால் அடுத்த நாள் புதன் கிழமை அவர் பதவி  நீக்கப்பட்டுள்ளார்.


உங்களுக்கு என்ன அமைச்சு வேண்டும் ? நான் தருகிறேன் .. உங்களுக்கு என்ன அமைச்சு வேண்டும் ? நான் தருகிறேன் .. Reviewed by Madawala News on 8/26/2017 03:14:00 PM Rating: 5