tg travels

தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கராக பொதுபல சேனா முன்னாள் ஸ்தாபக தலைவர் நியமனம் !


பொதுபல சேனாவின் ஸ்தாபகர் மற்றும்  முன்னாள் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ரஜமகா விகாரையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கிரம விமலஜோதி தேர்ருக்கு தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கர் பதவிக்கான நியமன ஆவணத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கி வைத்துள்ளார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன,

ஒட்டுமொத்த பௌத்த சமூகத்தினதும் நன்மைகருதி தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விரிவான குறிக்கோளுடன் செயற்படும் கிரம விமலஜோதி, தேரரின் புத்த சாசனத்திற்கான மற்றும் சமூக செயற்பணியினை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி ,அவரது தமது கடமைகளை மிகவும் பொறுப்புடன் நிறைவேற்றி முன்னுதாரணமாக செயற்படும் ஒருவர் என குறிப்பிட்டார்.  

விசேட சமய பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டு பௌத்த சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவும், சிறந்த அறிவும், ஒழுக்கமும் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவரது அர்ப்பணிப்பினையும் ஜனாதிபதி பாராட்டினார்.

உன்னதமான பௌத்த தேரர்களின்  கௌரவத்தையும், நன்மதிப்பையும் பாதுகாக்கும் பொருட்டு தேரர்கள்  செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சிறந்த நடத்தையும், கௌரவமும் கொண்ட பிக்குமாரே இன்றைய சமூகத்தின் எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்ததுடன், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சில இளம் பிக்குமார் நடந்துகொள்ளும் விதம் ஊடகங்களினூடாக உலகம் முழுவதும் காண்பிக்கப்படுவதனால் பிக்குகள் தொடர்பாக மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது என்றும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

தெஹிவல நெதிமால பௌத்த கலாசார நிலையத்தின் பொறுப்பதிகாரி, வெஹெரஹேன சிறி ரேவத்த மகா பிரிவெனாவின் பொறுப்பாளர், தென்னிலங்கைக்கான பிரதான சங்கநாயக்கர் வண.கிரம விமலஜோதி தேரருக்கு ஜனாதிபதி நினைவுப்பரிசொன்றையும் வழங்கினார்.

தேரர் அவர்களால் எழுதப்பட்ட தர்ம போதனை நூல்களும் ஜனாதிபதியிட்ம கையளிக்கப்பட்டன.


அண்மையில் மாத்தறை மாவட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் வீடுகளை இழந்த மக்களுக்கான காணி உறுதிகள் இதன்போது வழங்கப்பட்டது, 

 

சிங்கப்பூரின் மகா கருணா பௌத்த சங்கத்தின் போதனையாளர் அலவ்வே குணரத்தன தேரரினால் அந்த மக்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான நிவாரணப் கோட்டே ஶ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் புண்ணிய நிகழ்வின் தலைமைப் பொறுப்பை வகித்ததுடன், தெவுந்தர சஜமகா விகாராதிபதி ஸ்ரீ கல்யாணவங்ச மகா நிக்காயவின் அனுநாயக்கர் தெவுந்தர சிறி சுனந்த நாயக்க தேரர், பேராசிரியர் மிதிகம சோரத்த நாயக்கதேரர், மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கேகாலை ரத்தனசார நாயக்க தேரர் உள்ளிட்ட மாகாணத்தின் மகாசங்கத்தினரும், பூர்வாராம ரஜமகா விகாரையின் கொடையாளர் சபையின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர் அனுராத ஜயரத்ன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா, மாகாண அமைச்சர் சந்திம ராசபுத்ர மாகாண மக்கள் பிரதிநிதிகள் பிரதேச மக்கள் உள்ளிட்டோர் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கராக பொதுபல சேனா முன்னாள் ஸ்தாபக தலைவர் நியமனம் ! தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கராக பொதுபல சேனா முன்னாள் ஸ்தாபக தலைவர் நியமனம் ! Reviewed by Madawala News on 8/13/2017 12:01:00 AM Rating: 5