Kidny

Kidny

நீக்குவதா ? நீடிப்பதா ?நெருக்கடிக்குள் ஜனாதிபதி ..


விஜேதாஸ ராஜபக்ஷவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு கோருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மாணித்துள்ளதாக செய்திகள்

வெளியாகியுள்ள போதும் விஜேதாசவை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி எதுவித இறுதி தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த நீதி அமைச்சாராக தலதா அதுகோரள பதவி ஏற்பார் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ள போதும் ஜனாதிபதி விஜேதாசவை நீக்குவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

விஜேதாஸவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி விடுமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியும் எழுத்துமூலம் கோரிக்கை முன்வைத்திருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் – தான் போட்டியிட்டபோது, தனது வெற்றிக்காக விஜேதாஸ உழைத்தவர் என்பதனால், அவரை பதவியிலிருந்து நீக்குவதை விடவும், ராஜிநாமா செய்ய வைப்பதையே ஜனாதிபதி விரும்புவதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும்,அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யுமாறு விஜேதாஸவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை,அவர் ஏற்கனவே நிராகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி பதவி விலக்கினால் பரவாயில்லை அவராக அமைச்சு பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என அவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நாளை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விஷேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பில் விஜேதாச தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் பிரதமருனான கலந்துரையாடலின் பின்னர் மடவளை நியுஸுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாசவை நீக்குவது தொடர்பில் பிரதமர் உறுதியாக உள்ளார் ஜனாதிபதி என்ன தீர்மானம் எடுக்கிறார் என பார்போம் என குறிப்பிட்டிருந்தார்.

குறித்த பா உறுப்பினரின் பதில் விஜேதாச விடயத்தில் ஜனாதிபதி எளிதாக தீர்மானம் ஒன்றுக்கு வரமாட்டார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.


நீக்குவதா ? நீடிப்பதா ?நெருக்கடிக்குள் ஜனாதிபதி .. நீக்குவதா ? நீடிப்பதா ?நெருக்கடிக்குள் ஜனாதிபதி .. Reviewed by Madawala News on 8/23/2017 01:39:00 AM Rating: 5