Kidny

Kidny

தம்புள்ளை பள்ளிவாயல் சட்டவிரோத கட்டடமானது !


ARA FAREEL-

தம்­புள்ளை ஹைரியா பள்­ளிவா­சலின் கழிப்­ப­றை­களில் சில திருத்த வேலை­களைச் செய்­வ­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வாகம் தம்­புள்ளை பிர­தேச செய­லா­ள­ரிடம் அனு­மதி கோரி­ய­போது தம்­புள்ளை பள்­ளி­வாசல் சட்­ட­வி­ரோத கட்­டிடம் என்­பதால் அனு­மதி தர இய­லாது என மறுத்­து­விட்­ட­தாக பள்­ளி­வா­சலின் உப செய­லாளர் எஸ்.எச்.எம். ரவூப் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சலின் கழிப்­ப­றை­களின் கழி­வுகள் தேங்கும் குழி நிரம்பி வழி­வதால் சுகா­தா­ரத்­துக்குப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் ரவூப், பிர­தேச செய­லா­ள­ரிடம் முறை­யிட்­ட­போதும் கழிப்­பறை திருத்த வேலை­க­ளுக்கு பிர­தேச செய­லாளர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

பள்­ளி­வாசல் நிர்­வாகம் தம்­புள்ளை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையை தொடர்பு கொண்டு இவ்­வி­வ­காரம் தொடர்பில் முறை­யிட்டும் அவர்­களால் எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யா­தெ­னவும் கொழும்பு தலைமைக் காரி­ய­ல­யமே நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் சட்­ட­வி­ரோ­த­மா­னது என பிர­தேச அரச அதி­கா­ரிகள் தெரி­வித்து வரு­வதால் பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு உடனடியாகத் தீர்வு பெற்றுத் தருமாறு பள்ளிவாசல் நிர்வாகம் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தம்புள்ளை பள்ளிவாயல் சட்டவிரோத கட்டடமானது ! தம்புள்ளை பள்ளிவாயல் சட்டவிரோத கட்டடமானது ! Reviewed by Madawala News on 8/22/2017 12:56:00 PM Rating: 5