tg travels

சிறந்தவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு எல்லா காலங்களிலும் கிராமத்து விகாரைகள்,வணக்கஸ்தலங்கள் முக்கியமானவை ..


மாணவ சமூகத்திற்கு சிறந்த கல்வியை வழங்க தற்போதைய அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


அதேபோன்று கிராமிய மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் அவர்களது பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

அரலகங்வில, ஸ்ரீ ஜேதவனாராம விகாரையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூபியை திரைநீக்கம் செய்துவைக்கும் நிகழ்வில் அண்மையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

 

அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தியின் நன்மைகளை பெற்றுக்கொடுத்து அவர்களது பொருளாதாரத்தை சுபீட்சப்படுத்துதல் தற்போதைய அரசின் செயற்பாடாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி , பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு எதிர்வரும் மூன்று வருட காலப்பகுதிக்குள் கல்வி, சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

சிறந்தவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு வரலாற்றுக் காலங்களில் மட்டுமன்றி எல்லா காலங்களிலும் கிராமத்து விகாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்கள் முக்கியமானவை என்று தெரிவித்த ஜனாதிபதி , அவ்வாறான இடங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து ஆன்மீக பண்புகளைக்கொண்ட சமூகத்துடன் அபிவிருத்தியின் எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்ளுதல் தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும் என்றும் குறிப்பிட்டார்.

 

அரலகங்வில ஸ்ரீஜேதவனாராம விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதுடன், விகாராதிபதி வண. மின்னேரியே சுபாலங்கார நாயக்க தேரரையும் தரிசித்து உரையாடினார்.

 

விகாரைக்குரிய புண்ணிய பூமிக்கான உறுதியையும் ஜனாதிபதி இதன்போது விகாராதிபதி தேரரிடம் வழங்கினார். ஜனாதிபதியின் வருகையை நினைவுகூரும் வகையில் விகாரையின் வளாகத்தில் நாகமரக் கன்றும் நடப்பட்டது.

 

இந்த நிகழ்வில் திம்புலாகல ஆரன்ய சேனாசனாதிபதி வண. வில்லானே சிறியாலங்கார நாயக்க தேரர் பிரதம தேரராக கலந்துகொண்டதுடன், மாகாணத்தின் மகாசங்கத்தினரும், பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கொலொன்னே உள்ளிட்ட பிரதேசத்தின் பக்தர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.

சிறந்தவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு எல்லா காலங்களிலும் கிராமத்து விகாரைகள்,வணக்கஸ்தலங்கள் முக்கியமானவை .. சிறந்தவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு எல்லா காலங்களிலும் கிராமத்து விகாரைகள்,வணக்கஸ்தலங்கள் முக்கியமானவை .. Reviewed by Madawala News on 8/08/2017 11:00:00 AM Rating: 5