Kidny

Kidny

பொலிஸாரால் எனக்கு அச்சுறுத்தல் ! நான் தலைமறைவாக உள்ளேன் ..


மட்டக்களப்பு மங்களா ராமய பிரதம தேரர் அம்பிடிய சுமனரத்ன தேரரை காணவில்லை என சிங்களே ஜாதிக பலமுழுவ அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் தான் தாலைமறவாக உள்ளதாக அம்பிடிய சுமனரத்ன தேரர் முகநூல் வாயிலாக அறிவித்துள்ளார்.


தேரரை நேற்று நன்பகல் முதல் காணவில்லை எனவும் இது தொடர்பில் மட்டக்களப்பு மங்களா ராமய விகாரையில் இருந்து தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் குறித்த சிங்களே அமைப்பு தெரிவித்திருந்த நிலையில்.

மட்டகளப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தன்னை போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையில் அடைக்க முயற்சித்துவருவதாக குறிப்பிட்டுள்ள அவர் இது தொடர்பில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தான் தகவல் வழங்கியுள்ளதாகவும்.

தனக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்பட்ட பின்னர் தான் மீண்டும் மங்களா ராமயவுக்கு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தேரர் தனது நன்பர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரால் எனக்கு அச்சுறுத்தல் ! நான் தலைமறைவாக உள்ளேன் .. பொலிஸாரால் எனக்கு அச்சுறுத்தல் ! நான் தலைமறைவாக உள்ளேன் .. Reviewed by Madawala News on 8/26/2017 04:00:00 PM Rating: 5