Kidny

Kidny

விஜேதாச ராஜபக்‌ஷ தொடர்பில் அனைத்து பீடங்களும் ஒன்றினைந்து விஷேட கலந்துரையாடல் ..


நீதி  மற்றும்  புத்­த­சா­சன அலு­வல்கள் அமைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ இன்­றைய தினம் தனது அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்யும் சாத்­தியம் இருப்­ப­தாக தகவல் வெளியான வண்ணம் உள்ள போது ஜனாதிபதி தரப்பு இன்னும் இதை அறிவிக்கவில்லை.


இதே நேரம் விஜேதாச ராஜபக்‌ஷவை காப்பாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்களும் இன்று கலந்துரையாடவுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் பௌத்த பீடங்கள் தங்கள் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் அமைச்சுப் பத­வி­களை பகிர்ந்து கொண்­டுள்­ளன.அந்­த­வ­கையில் நீதி­ய­மைச்­சா­னது ஐக்­கிய தேசியக் கட்­சி­யிடம் இருக்­கி­றது. 

எனவே அந்த அமைச்சுப் பத­வியை மாற்றி வேறு ஒரு­வ­ருக்கு  வழங்­கு­மாறு ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் கூறு­மி­டத்து அதனை ஜனா­தி­பதி செவி­ம­டுத்தே ஆக­வேண்­டிய நிலைமை காணப்­ப­டு­கி­றது. 

இன்று மாலை இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை 7.30 மணிக்கு இடம்பெற உள்ள நிலையில் அனைத்து ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.



விஜேதாச ராஜபக்‌ஷ தொடர்பில் அனைத்து பீடங்களும் ஒன்றினைந்து விஷேட கலந்துரையாடல் .. விஜேதாச ராஜபக்‌ஷ தொடர்பில் அனைத்து பீடங்களும் ஒன்றினைந்து விஷேட கலந்துரையாடல் .. Reviewed by Madawala News on 8/23/2017 11:23:00 AM Rating: 5