Yahya

மியன்மாரிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த சிலை மக்கள் வழிபாட்டுக்காக திறந்துவைப்பு ..


பன்னிப்பிட்டிய, ஸ்ரீதர்ம விஜயாலோக்க விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மியன்மாரிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த பிரானின் திருவுருவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைத்தார்.


புத்தபிரானின் புதிய திருவுருவ சிலைக்கு மலர்தூவி வழிபட்ட ஜனாதிபதி நேற்றையதினம் மக்களின் வழிபாட்டுக்காக அதனை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் ராமக்ஞ நிக்காயவின் மகாநாயக்கர் நாபான பேமசிறி தேரர், மல்வத்து பிரிவின் அனுநாயக்கர் திம்புல்கும்புறே விமலதம்ம தேரர், யட்டிராவன சீலானந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ஸ, தயா கமகே, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மியன்மாரிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த சிலை மக்கள் வழிபாட்டுக்காக திறந்துவைப்பு .. மியன்மாரிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த சிலை மக்கள் வழிபாட்டுக்காக திறந்துவைப்பு .. Reviewed by Madawala News on 8/16/2017 11:26:00 PM Rating: 5