Kidny

Kidny

இந்த அரசின் பதவிக் காலம் முடிவடைவதற்குள் இந்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். 


கடந்த ஆட்சியின் கீழ் இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் சம்பந்தமாக முiறான விரிவான விசாரணைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறினார்.

முகத்துவாரம் திலாசல் கிறிஸ்தவ கல்வி கூடத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக கட்டிட பொருள்கள் உட்பட ஏனைய பல பொருள்ளை கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த அரசின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் பற்றி விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்து அதன் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன. 

இதில் வேடிக்கை என்னவென்றால் பொது எதிரணியைச் சேர்ந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டு மற்றும் கொலைக் குற்றச்சாட்டு என்பன உள்ள பலர் இப்போது நீதிமன்றங்களுக்கு வெளியே நின்று கொண்டு இது சம்பந்தமாக மற்றவர்களை நோக்கி விரலை நீட்டி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

எனவே ஜனாதிபதியிடம் நாம் கேட்டுக் கொள்வது என்ன வென்றால் இந்த விசாரணைகளைத் துரிதப்படுத்தி அதேபோல் கடந்த ஆட்சியில் பில்லியன் கணக்கில் சூறையாடிவர்களுக்கு எதிராகவும் விசாரணைகளை மேற்கொண்டு பழைய திருடர்களையும் சட்டத்தின் முன்னாள நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான். 

இந்த அரசின் பதவிக் காலம் முடிவடைவதற்குள் இந்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். இந்த வகையான 89 குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை தாங்கள் பூர்த்தி செய்துள்ளதாகவும் ஆனால் அவற்றில் ஒன்று தொடர்பாகக் கூட இன்னமும் வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த விடயங்களைத் துரிதப்படுத்தாவிட்டால் ஜனாதிபதிக்கு ஒரு பொறுப்பு உள்ளது இந்த விடயங்களில் தலையிட்டு இந்த ஆட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகளை வெளிக் கொண்டு வர ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்தது போல் கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளையும் வெளிக் கொண்டு வரவும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும். இந்த நீதிமன்ற விசாரணைகள் எடுக்கப்படாததால் முன்னைய ஆட்சியின் கள்வர்கள் தங்களை சுத்தமானவர்கள் போல் காட்டிக் கொண்டு மற்றவர்கள் மீது தொடர்ந்து பழி சுமத்தி வருகின்றனர். நான் எப்போதுமே ஊழல் மோசடி மற்றும் வீண் விரயம் என்பனவற்றுக்கு விரோதமானவன். நான் எனது இரு கரங்களும் சுத்தமான அரசியல் வாதி. அந்த வகையில் மோசடியாளர்களை விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்குங்கள் என்று மிகவும் துணிச்சலாக என்னால் கூற முடியும். கடந்த ஆட்சியின் மோசடி குற்றவாளிகளையும் தண்டியுங்கள் இந்த ஆட்சியின் குற்றவாளிகளையும் தண்டியுங்கள என்பதுதான் எமது கோரிக்கை.

படவிளக்கம் 1. முகத்துவாரம் திலாசல் கிறிஸ்தவ கல்வி நிலையத்தின் பணிப்பாளர் சகோதரர் மேர்வின் உற்பட ஏனைய உறுப்பினர்கள் எஸ்.எம். மரிக்காரடமிருந்து கல்வி நிலைய அபிவிருத்திக்கான உதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.


படவிளக்கம் 2. ரூபா ஐந்து லட்சம் பெறுமதியான கட்டிடப் பொருள்களில் ஒரு பகுதி



 

இந்த அரசின் பதவிக் காலம் முடிவடைவதற்குள் இந்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும்.  இந்த அரசின் பதவிக் காலம் முடிவடைவதற்குள் இந்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும்.  Reviewed by Madawala News on 8/14/2017 01:01:00 PM Rating: 5