Ad Space avaiable

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு உடனடியாக நிரந்தர அதிபரை நியமிக்க அரசு சேவை ஆனைக்குழு அங்கீகாரம்.

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் சுமார் ஒன்றரை வருடங்களாக அதிபர் இல்லாமையால் 3600 மாணவிகள் கல்வி கற்கும் இப்பாடசாலை நேரத்திற்கு பாடம் நடைபெறாமை பாடத்திற்கு ஆசிரியர் சமூகமளிக்காமை பாடத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பலவிதமான சிக்கல்களையும் நிர்வாக சீர்கேடுகளையும் எதிர்நோக்கி வருகிறது.


இதன் பிரதிபலனாக அண்மையில் நடைபெற்ற தவனை பறீற்சை நடாத்துவதில் பாரிய சிக்கல்களை இக்கல்லூரி முகம் கொடுக்கவேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

இந்நிலமைகள் கல்வி அமைச்சுக்கு சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து இக்கல்லூரிக்கு உடனடியாக அதிபர் ஒருவரை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வந்தது.இதனடிப்படையில் உடனடியாக அதிபர் ஒருவரை நியமிக்க கல்வி அமைச்சுக்கு அரச சேவை ஆனைக்குழுவின் அங்கீகாரம் அளித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

எதிர்வரும் வெளிக்கிழமை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,அநேகமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை தவறும் பட்சத்தில் வர்த்தமானி பத்திரிகையின் இடநெருக்கடியை பொறுத்து தொடர்ந்து வரும் கிழமைகளில் வர்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

எனவே நாடுமுழுவதிலும் உள்ள தகுதி வாய்ந்த முஸ்லிம் பெண் அதிபர்களிடம் இருந்து இக்கல்லூரிக்கு விண்ணப்பம் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தகைமையுடைய ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் தேர்ச்சி பெற்ற முஸ்லிம் பெண் அதிபர்கள் இக்கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்படி வேண்டிக்கொள்ளப்படுகின்றனர். 

மேலும் இத்தோடு பற்றாக்குறை நிலவும் ஏனைய தேசிய படசாலைகளுக்கும் அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார் .

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு உடனடியாக நிரந்தர அதிபரை நியமிக்க அரசு சேவை ஆனைக்குழு அங்கீகாரம். பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு உடனடியாக நிரந்தர அதிபரை நியமிக்க அரசு சேவை ஆனைக்குழு அங்கீகாரம். Reviewed by Madawala News on 8/07/2017 12:28:00 PM Rating: 5