Kidny

Kidny

முஸ்லிம் தனியார் சட்ட திருத்த அறிக்கை தயார். 


முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ள­வேண்­டிய திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வறிக்­கையில் எதிர்­வரும் 27 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை குழுவின் அங்­கத்­த­வர்­களின் கையொப்­பங்கள் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.


இறுதிக் கட்­டத்தில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமா­அத்­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட 53 பக்­கங்கள் கொண்ட திருத்த பரிந்­து­ரை­களும் கவ­னத்­திற்­கொள்­ளப்­பட்­டன என முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற உயர்­நீ­தி­மன்ற முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தெரி­வித்தார்.


சட்­டத்­தி­ருத்த சிபா­ரிசு அறிக்கை நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷவிடம் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கா­ரங்கள் அமைச்சர் எச்.எச்.ஏ. ஹலீம் ஊடாக சமர்ப்­பிக்­கப்­பட்டு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் பெற்றுக் கொள்­ளப்­பட்­டதன் பின்பு விவா­தத்­திற்­காக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும்.


முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக இக்­குழு 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் நிய­மிக்­கப்­பட்­டது.


இக்­கு­ழுவில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், நீதி­ப­திகள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர், செய­லாளர் உட்­பட முஸ்லிம் பெண்கள் அமைப்பின் பிர­தி­நி­தி­களும் உள்­ள­டங்­கி­யுள்­ளனர்.

இதே­வேளை, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம். சல்மான் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தம் தொடர்பாக தனி நபர் பிரேரணையொன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் தனியார் சட்ட திருத்த அறிக்கை தயார்.  முஸ்லிம் தனியார் சட்ட திருத்த அறிக்கை தயார்.  Reviewed by Madawala News on 8/14/2017 10:42:00 PM Rating: 5