Kidny

Kidny

குச்சவெளி இளந்தைக்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் அவல நிலை ! 


குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு பாடசாலையின் இக்கால கட்டத்தின் நிலைக்கு யார் பொறுப்பு கிழக்கு முஸ்லீம் முதலமைச்சர்,தேசிய தலைமைகள் முஸ்லீம்கள்,திருகோணமலை மாவட்ட மூன்று முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள்,திருமலை மாவட்ட இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் யார்தான் இதனை கவனத்திற்கொள்வது .

பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக மனமுவந்து அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வாருங்கள் என அப் பகுதி பெற்றார்கள் கவலை தெரிவிக்கின்றனர்கள் மழை காலங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுவும் ஒரு பாடசாலைதான், வேறு எங்குமல்ல திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள "குச்சவெளி இளந்தைக்குளம் முஸ்லிம் வித்தியாலயம்" என்னும் பெயரையுடைய ஒரு முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையே. அந்தப் பாடசாலையில் உள்ள இரண்டே இரண்டு கட்டிடங்கள்தான் இவை.

எமது பிள்ளைகளைப்போன்ற 90க்கும் அதிகமான பச்சிளம் சிறுவர்கள் கல்வி கற்கும் ஓர் பள்ளிக்கூடம். பல அரசியல், அதிகாரம் கொண்ட தலைவர்களைத் தங்கள் தலையில் தூக்கிவைத்து ஊர்வலம் செல்ல மட்டுமே முடிந்த பலரது கண்கள் இதனைக் காண குருடாகி விட்டன.

எம்மால் முடிந்தால், எம் மனதால் முயற்சி செய்தால் ஓலைக்கொட்டில்களில் கற்கும் இந்தப் பச்சிளம் குழந்தைகளை ஓர் சிறந்த பள்ளியறையில் பயில வைக்க முடியும். இருந்தும் நாம் இதனை சிந்திப்போமா???

இம்மாவட்டங்களுக்கு வந்து செல்கின்ற முஸ்லீம் அரசியல் தலைமைகள் பல கூட்டங்களை நடாத்தும்போது இது தொடர்பாக சிந்திப்பதில்லை எனவே தங்களுக்கான அரசியல் பதவிகளை முஸ்லீம் சமூகத்துக்காக விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அரியலு அதிகாரங்களை பயன்படுத்தி இந்த பாடசாலையின் நிலையை அறிந்து கட்டிட வசதிகளை செய்து கொடுக்க முன்வருமாறு அரசியல் தலைமைகளை கேட்டு நிற்கின்றனர்

குச்சவெளி இளந்தைக்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் அவல நிலை !  குச்சவெளி இளந்தைக்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் அவல நிலை !  Reviewed by Madawala News on 8/22/2017 01:06:00 AM Rating: 5