tg travels

இழக்கப்பட்ட காணிகளை மீட்டெடுப்பதற்காக கல்குடா மஜ்லிஸில் சூறா சபையானது என்றும் ஓத்துழைப்பு வழங்கும்.. 

 

ஓட்டமாவடி செய்தியாளர் அ.ச.முகம்மது சதீக்

முறாவோடை சக்தி வித்தியாலத்தினால் அண்மையில் விளையாட்டு மைதானத்தை விஸ்தரிப்பு செய்வதற்காக அதன் அண்மையிலுள்ள காணிகளை சட்ட ரீதியற்ற முறையில் சுவீகரிப்பதற்காக போராட்டங்களை முன்னெடுத்தது இதில் முஸ்லிம்களின் காணிகள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது இதனை கருத்திற் கொண்டு கல்குடா மஜ்லிஸீல் சூறா சபையானது இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் இடத்திற்கு சென்று பார்வையிட்டது இதில் கல்குடா மஜ்லிஸீல் சூறா சபையின் தலைவர் சட்டத்தரணி ஈ சகாப்தீன் அவர்களால் இக்காணிகளின் ஆவணங்களை பரீசிலனை செய்யப்பட்டு எதிர்காலத்தில் சட்டநடவடிக்கையின் பின்னர் இக்காணிகளை மீட்டெடுப்பதற்காக முயற்சிகளை ஈடுபடுவதாக கூறியதோடு பொதுமக்கள் யாரும் வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். 

இதில் கல்குடா மஜ்லிஸ் சுறா சபை உறுப்பினர்களால் ஆவனங்கள் தொடர்பாகவும் எமது மக்களுடைய இருப்பு தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

ஆங்கு கருத்து தெரிவித்த மீராலெப்பை வயது 72 என்பவர் எமது காணியின் ஆவணங்கள் சில எங்களிடம் உள்ளது யுத்த காலத்தில் இவ்விடத்தை இந்திய சமாதானப்படையினர் முகாமிட்டு இருந்தனர் அதன் பின்னர் எங்களது இடத்தை இலங்கை இராணுவம் காவலரண்கள் அமைத்திருந்தனர் நாங்கள் எங்களது இடத்தை விட்டு எங்களது உறவினர்களின் வீடுகளுக்கு சென்றிருந்தோம் அகதியாக வேறு மாவட்டங்களுக்கு சென்றிருந்தோம் இலங்கை அரசாங்கம் 2009 ம் ஆண்டுக்கு பின்னர் மீள்குடியேறுமாறு செய்திகள் வாயிலாக அறிந்து எமது வழமையான இடத்துக்கு வந்து குடியமர்ந்து வழமை போன்று செய்து வந்த சேனைப்பயிரச்செய்கை ,ஓடாவி தொழிலக்ள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றோம் என்று தெரிவித்தார்.


ஆதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்தவர்கள் எமது மற்ற இன சகோதரர்கள் எமது இடங்களை அடிக்கடி சேதப்படுத்துவதாகவும் இப்பிரதேசம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது எமக்கு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் மாஞ்சோலை பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம சேவையாளர்களான காலஞ்சென்ற ஈசா லெப்பை விதானையானார்.


விடுதலை புலிகளால் கடத்தப்பட்ட புகாரி விதானையானர் மற்றும் தற்போது இளைப்பாறி சென்ற ஆதம்லெப்பை விதானையானர் ஆகியோர் இவ்விடத்தில் தங்களது சேவைகளை செய்ததாக கூறினார்

குல்குடா மஜ்லிஸீல் சூறா சபையின் மூத்த உறுப்பினர் யூ.எல் மஹ்மூத் அவர்கள் கூறுகையில் எமது பிரதேசத்தில் மக்களின் சனத்தொகை அடர்த்தி அதிகமாக உள்ளதனால் அதற்கான காணிகள் இல்லாமையால் எமக்கு பல நோய்கள் வருவதாகவும் எமது பிரதேசவாதிகள் இழக்கப்பட்ட காணிகளை மீட்டெடுப்பதற்காக எமது கல்குடா மஜ்லிஸில் சூறா சபையானது என்றும் ஓத்துழைப்பு வழங்கும் என்று குறிப்பிட்டார்.

அதன் பின்னர் முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் சட்ட விரோத காணி சுவீகரிப்பு முயற்சி சம்பந்தமான விடயத்தை நிர்வாகம் செய்துவரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம் எஸ் சில்மியா அவர்களை கல்குடா மஜ்லிஸீல் சூறா சபையானது இன்று சந்தித்து அவர்களின் ஆதங்கங்களை முன்வைத்தனர் அங்கு கருத்து தெரிவித்த கல்குடா மஜ்லிஸீல் சூறா சபையின் தலைவர் சட்டத்தரணி ஈ சகாப்தீன் அவர்கள் அக்காணிகளின் ஆவணங்களை பரிசீலனை செய்ததாகவும் அவ்விடயம் தொடர்பான சட்ட ரீதியான விடயத்தில் கல்குடா மஜ்லிஸீல் சூறா சபையின் பூரண பங்களிப்பு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன்பின்னர் அங்கு கருத்து தெரிவித்த கல்குடா மஜ்லிஸீல் சூறா சபையின் செயலாளர் எம். ஜ காமித் மௌலவி அவர்கள் எமது நிர்வாக எல்லைக்குள் கோறளைப்பற்று பிரதேச செயலகம் அத்துமீறி வருவதற்கு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துதெரிவித்த கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம் எஸ் சில்மியா அவர்கள் இக்காணி விடயமாக முறவோடை சக்தி வித்தியாலயத்தினால் நடாத்தப்பட்ட போராட்டங்கள் தான் அறிவேன் என்றும் மக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை நிர்வாக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.


இழக்கப்பட்ட காணிகளை மீட்டெடுப்பதற்காக கல்குடா மஜ்லிஸில் சூறா சபையானது என்றும் ஓத்துழைப்பு வழங்கும்..  இழக்கப்பட்ட காணிகளை மீட்டெடுப்பதற்காக கல்குடா மஜ்லிஸில் சூறா சபையானது என்றும் ஓத்துழைப்பு வழங்கும்..  Reviewed by Madawala News on 8/08/2017 10:56:00 PM Rating: 5