Kidny

Kidny

பிரதமருடனான விஷேட கலந்துரையாடல் சற்றுமுன் நிறைவடைந்தது ! 


நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று இரவு கலந்துரையாடி எதிர்வரும் நாட்களுக்குள் இறுதி தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.

சற்றுமுன்னர் அலறி மாளிகையில் பிரதமரை சந்தித்த ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் கட்சி நிறைவேற்று உறுப்பினர்கள் குழு விஜேதாச ராஜபக்‌ஷவை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை முன்வைதுள்ளனர்.

இது தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவதாக அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவை அமைச்சர் பதவி மற்றும் கட்சி உறுப்புரிமைகளில் இருந்து நீக்க ஐக்கிய தேசிய கட்சி உயர்மட்டத்துக்கு பரிந்துரைசெய்ய கட்சியினால் இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு தீர்மாணித்திருந்த நிலையில் பிரதமர் இது தொடர்பில் இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமருடனான விஷேட கலந்துரையாடல் சற்றுமுன் நிறைவடைந்தது !  பிரதமருடனான விஷேட கலந்துரையாடல் சற்றுமுன் நிறைவடைந்தது !  Reviewed by Madawala News on 8/21/2017 08:03:00 PM Rating: 5