Kidny

Kidny

இன்று ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்று குழு கூட்டத்தில் சூடு பிடித்த விஜேதாச விவகாரம்..


ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான கூட்டம் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ அவர்கள் விடயமாக சுமார் இரண்டு மணி நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது விஜேதாச ராஜபக்‌ஷ அவர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் நடந்துகொள்வது தொடர்பில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நீதி அமைச்சர் விஜேதாச தன் மீதான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ளார்.இலங்கையின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் இருக்கும் நடைமுறையால் முன்னைய அரசாங்கத்தின் ஊழல் விசாரணைகள் தாமதமாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை சில வழக்கு விசாரணைகள் வருடக்கணக்கில் செல்லும் பொறிமுறை இங்கு உள்ளது என்பதை அறியாதவர்கள் போல் கருத்து வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் விஜேதாச தொடர்பில் இறுதித்தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள அதேவேளை அதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த குழு இது தொடர்பில் இரு வாரத்திற்குள் இறுதி தீர்மானம் எடுக்கும் என சிரிகொத்த செய்திகள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.

இன்று ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்று குழு கூட்டத்தில் சூடு பிடித்த விஜேதாச விவகாரம்.. இன்று ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்று குழு கூட்டத்தில் சூடு பிடித்த விஜேதாச விவகாரம்.. Reviewed by Madawala News on 8/17/2017 03:17:00 PM Rating: 5