Ad Space Available here

காயாத உதிரங்கள்


பகுதி - 01

காயாத உதிரங்கள்

பொலநறுவை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்-1992

போர்கள் இல்லாத வரலாறுகள் கிடையாது. வரலாறுகளில் போர்களே மூலப் பொருளாக அமைந்து விடுகிறது. ஒவ்வொரு தசாப்தங்களிலும் வாய் சொல்லிலிருந்து துப்பாக்கிச் செல் வரைக்கும் உதிரக்கதை பேசும் ஆயிரம் வரலாறுகள் உண்டு. ஒவ்வொன்று வரலாற்றிலும் ஆயிரம் சோகக் கதைகளுமுண்டு. அவ்வாறான ஓர் வரலாற்றுப் போர்தான் நம் நாட்டில் பல தசாப்த காலமாக கிள்ளிக்கிள்ளி எறிய முளைத்த கோரைப்புல் போல வேறெடுத்தது ஈழத்துப் போர்.

 

என் நாடு என்று ஓர் கூட்டமும், தனி நாடு தமிழ் நாடு என்று ஓர் கூட்டம் விதைத்த விதை ஆயிரம் மரமாகி ஒன்றுமறியா அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது கோழைத்தனமாய் தூங்கும் போதும் தொழும் போதும் வேடிக்கை விளையாட்டுப் பொருட்கள் போல மாறி மாறி உயிரைப் பறித்த பல சம்பவங்கள் வரலாறுகளிலுண்டு.அவ்வாறான ஓர் அநீதிப்படுகொலைச் சம்பவமே இது.

இக்கோரச்சம்பவத்தைப் பற்றி இலங்கை முஸ்லிம்கள், அன்றும் இருந்து இன்றும் இருக்கும் அரசியல்வாதிகள் கூட ஏன் அப்பிரதேச மக்கள் கூட மறந்திருக்கலாம்.ஆனால் வரலாறு அதனை என்றும் மறவாது.அதனை மன்னித்து விட்டு மான்போடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமிதக்காரர்கள் நாங்கள்.

 

அன்று வியாழக்கிழமை, 1992ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், 15ம் திகதி, நேரம் அதிகாலை 4.45 இராணுவச் சீறுடை அணிந்து ஆண்களும், சேலையணிந்த பெண்களும் கோஷ்டியாக வருகின்றனர்.

 

பொலன்னறுவை மாவட்டத்தில் மேற்கு கரையிலுள்ள அக்பர் புரம், அஹமது புரம், பள்ளிய கொடல்ல, பங்குராண ஆகிய கிராம எல்லைப் புறத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்கிறது. தூக்கத்தில் ஒன்றுமறியாத அந்த அப்பாவி மக்கள் மனைவி கணவனிடமும் பிள்ளை தாயிடமும் மாறி மாறி விசாரித்துக் கொள்கிறார்கள்.

 

மீண்டும் மீண்டும் அதே குண்டுச்சத்தமும் வெடில் சத்தமும் கிளம்புகிறது.

 

பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து விட்டனர் என்று அடையாளம் கண்டு கொண்டு படுத்த படுக்கையை விட்டு உடுத்திய உடையோடும் தூங்கிய சிசுக்களோடு பெண்களும், நிறை மாத கற்ப்பிணிகளும் திசையறியாது ஓடுகிறார்கள். வீடுகளிலெல்லாம் தீப்பற்றி எரிகின்றன. ஓடியோரில் சிலர் கத்தி நுனிக்கும் துப்பாக்கி ரவைக்கும் இறையாகி 200க்கு மேற்ப்பட்ட முஸ்லிம்கள் ஷகீதாக்கப்படுகின்றனர்.மேலும் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

 

மறுநாள் பத்திரிகைகளும் வானொலிகளும் தங்கள் பணிகளைச் சிறப்பாக செய்து முடிக்க சீறுகின்றன அரசியல் தலமைகள்.

 

1991ம் ஆண்டு காத்தான்குடி பள்ளி வாசலில் இடம்பெற்ற மிருகத்தனமான செயற்பாட்டிற்குப் பின் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட 2வது பாரிய படு கொலை இதுவாகும்.இதற்கான சரியான நிவாரணத்தினை நான் அரபு நாடுகளிடம் பெற்றுக் கொடுப்பேன் என்றார் ஸ்ரீ.மு.கா. தலைவர். ஆர்ஆ அஷ்ரப்.

மறுபக்கம் ஆ.டு.யு.ஆ ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் ஊர்களின் காப்புத்தன்மையைக் குறை கூறி அரசை குற்றம் சாட்டினார். இவ்வாறு கூட்டனி கட்சிகள் தொடக்கம் அனைத்துக்கட்சிகளும் மந்திரிகளும் தத்தம் ஆதங்கத்தையும் அக் கொடூர நிகழ்வை நடத்திய புலிகளுக்கெதிராகவும் குரல் கொடுத்தனர்.

 

இவ்வாறு பல கருத்துக்கள் கோவங்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் ஆத்திரமடையவில்லை, ஆயுதம் ஏந்தவுமில்லை அமைதியான முறையில் ஓர் சில நாட்களில் ' முஸ்லிம்களின் மனசாட்சி பேசுகிறது' , புலிகளே உங்களிடம் ஆயுதம் இருந்தால் எங்களிடம் அல்லாஹ் இருக்கிறான் ' என்ற தலைப்புக்களில் (20.11.1992 எழுச்சிக்குரல்) தங்கள் மன ஆதங்கத்தை துண்டுப்பிரசங்கமாக வெளியிடுகின்றனர் அந்த உத்தமர்கள்.

 

 

இந்தக் கொடூரச் செயலுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஸ்ரீ.மு.காங்கிரஸினால் அக்டோபர் 23ம் திகதி கரிநாள் என்று பிரகடனப்படுத்தி அது நாடு பூராகவும் வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்டது. .

 

இவ்வாறு ஆயிரம் சம்பவங்கள் ஒவ்வொறு வரலாறுகளிலும் இருந்து தூக்கெறியப்பட்ட விட்டன. இலங்கையில் அதிகமாக ஒடும்மப்பட்ட சமூகம் என்றால் அது முஸ்லிம் இனமே. ஆயினும் எம்மை ஓர் துரோகிகளாகவே அந்நிய சமூகங்கள் சித்தரிக்கின்றன. அனியாயக் கொலைகள் மலிந்து போன உலகில் அதில் மலிந்து கிடந்த இனம் முஸ்லிம்கள் என்ற வரலாறு அழிக்கப்பட்டு விட்டன. இவ்வாறு அப்பாவியான முஸ்லிம்கள் மீது அநீதிகள் நடத்தி விட்டு தீவிரவாதி என்ற பெயரைச் சூட்டி அழகு பார்க்கின்றன அந்நியச் சமூகங்கள். ஆனாலும் காலங்கள் கடந்தாலும் காயாத உதிரங்களாய் என்றும் அவை எம் மனதில் நிலைத்திருக்கும்.


ற. ரயீஸ்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

காயாத உதிரங்கள் காயாத உதிரங்கள் Reviewed by Madawala News on 8/02/2017 02:04:00 PM Rating: 5