Ad Space Available here

மெல்லச் சாவும் மனிதம்!


எம்.எம்.ஏ.ஸமட்

கடந்த 19ஆம் திகதி உலக மனிதநேய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இத்தருணத்தில், மனங்களில் வறுமைப்பட்டிருக்கும் மனிதம் என்ற மனிதநேயம் வளர்க்கப்பட வேண்டியது காலத்தின் தேiவாயகவுள்ளது. ஒரு மனிதனின் மனதை சொல்லினாலோ, செயலினாலோ சந்தோஷப்படுத்தினாலே போதும் அது கோடிப்புண்ணியத்தைக் கிடைக்கச் செய்யும்;. இறைவனின் அன்பையும் அருளையும் பெறச் செய்யும்.


அன்னியோன்யம், ஆறுதல், நேர்மறை உணர்வு, இரக்க சிந்தனை, கருணை, அன்புடன் நடந்துகொள்ளும்முறை, சமூக அக்கறை, என்பவை இருவருக்கிடையில், சமூகங்களுக்கிடையில் வெளிப்படுத்தப்படுமாயின் அவை மனிதத்தை வாழ வைக்கும்,


இப்பண்புகள் சக உறவுகளுக்கிடையே வெளிப்படையாகப் பகிரப்படுகின்றபோது, மனங்களில் மனிதநேயம் வற்றிப்போகாது. மாறாக. இவ்வம்சங்களில் ஏதாவது ஒன்று குறைவடையுமாயின் மனிதத்துவம் வளர்வதற்குப் பதிலாக மெல்லச் சாவதற்கு ஆரம்பித்துவிடும்.


வாழ்க்கையைத் துரத்துவோரும் வாழ்க்கையால் துரத்தப்படுவோரும் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த இயந்திர யுகத்தில், நவீனமயப்பட்ட வாழ்க்கை முறையும், இலத்திரனியல் தகவல் பரிமாற்றக் கலாசாரமும் மனிதநேயப் பண்புகளை மனித வாழ்வியலிருந்து மெல்ல மெல்லச் சாவடித்துக்கொண்டிருக்கிறது என்பதை தற்கால சமூக வாழ்க்கை முறைமையில் வெளிப்படையாகக் காண முடிகிறது.


இலத்திரனியல் பயன்பாட்டிற்கு அடிமைப்பட்ட சமூக அதிகரிப்பின் விளைவு மனிதத்;தை மரணிக்கச் செய்து கொண்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள் பலவற்றை அன்றாடம் பதிவேற்றப்படும் சமூகவலைத்தள தகவல் பரிமாற்றங்களினூடாக அவதானிக்க முடிகிறது.


விளம்பரப்படுத்தப்படக் கூடாத நிகழ்வுகள் பலவற்றை புகைப்படங்களாகவும், காணொலிக் காட்சிகளாகவும் சமூகவலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்ற அவசரத் தன்மையிலிருந்து மனிதத்துவ பண்புகள் வீழ்ச்சியின் விளிம்பில் தொங்கிக்கொண்டிருப்பதை நோக்க முடிவதோடு, மனிதாபிமானம் எந்நிலையில் தற்கால சமூகத்தின மத்தியில் காணப்படுகிறது என்பதையும் மலிவான விளம்பரங்களும், தகவல் பரிமாற்றக் கலாசார மோகமும்; புடம்போடுகின்றன.


தொழில்நுட்பப் புரட்சியால் வளர்ந்துவிட்ட தகவல் பரிமாற்றத்தின் பயன்பாடு குறித்து பெருமை பேசும் மனிதகுலம் அன்பு, பாசம், கருணை, இரக்கம் என்ற மனிதநேயப் பண்புகளை மின்னனுவியல் தகவல் சாதனங்களினூடாக இழந்துகொண்டிருக்கிறது என்பதை மறுக்கிறதா? எனக் கேள்வி எழுப்பவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.


 


மனிதமும் உலக மனிதநேய தினமும்.


மனித நேயத்துக்குரிய பண்புகளுடன்தான் ஓவ்வொரு மனிதனும்; இவ்வுலகில பிறக்கின்றான். இம்மனிதநேயப் பண்புகளுடன்தான் அவன் வாழ வேண்டும் வாழ்க்கையை நெறிப்படுத்த வேண்டுமென மதங்களும் வழிகாட்டுகின்றன. ஆனால், அப்பண்புகளோடு வாழ்வதற்கு மனித நாகரிகமும், இலத்திரனியல் பயன்பாட்டு மோகமும் தடைகளாக உள்ளன.


மனிதனில் காணப்படும்; பண்புகளில் அன்பு, கருணை, பாசம் என்ற மனிதத்துவப் பண்புகள் மனித உறவில் பெற்றோர் அன்பு, நட்பின் பாசம், சமூகப் பற்று என்பவற்றைக் கொண்டிருக்கிறது. இருப்பினும்;, நவீன கலாசார வாழ்க்கை முறையானது அவற்றை நலிவடையச் செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரிடமும் காணப்படும் மனிதத்துவப் பண்புகள் தற்கால சூழ்நிலையினால் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. பணமும், பட்டமும், பதவியும் மனிதநேயப் பண்புகளையும், செயற்பாடுகளையும் நிர்ணைகின்ற அளவுகோள்களாக மாறியுள்ளன என்பதே நிதர்சனமாகும். மனிதனை மனிதானாக மதிக்;கும் மனிதர்கள் அருகிக்கொண்டு செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் உதாரணங்களுக்கு மத்தியில்; மனிதநேயம் பற்றி பேசுவது கூட வெறுப்புக்குரியதாகவும,; நாகரியமற்றதாகவும் ஒரு சில மனிதம் இழந்தவர்களினால் நோக்கப்படும் என்பதிலும் ஐயமில்லை.


நாகரிகம்; தலைவிரித்தாடும் நகரப்புறங்களில் வாழும் சிலருக்கு பக்கத்து வீட்டில் வாழும் நபர்கள் யார் என்று கூட தெரிவதில்லை. அவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் உதவதற்குக் கூட மனங்கள் இடம்கொடுக்காது நமக்கேன் வீண் வம்பு என்ற உளப்பாட்டில்தான் மனிதநேயம் காணப்படுகிறது. இருந்தபோதிலும், மனிதநேயமானது மனிதன் தேடுகின்ற நிலையை அல்லது இலக்கை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை அறிவுடனும், அனுபவத்துடனும் செயற்படுத்த உதவுகின்றது என்ற நிதர்சனத்தையும் சுட்டிக்காட்டமல் இருக்க முடியாது.  


அனைத்து மதங்களும், கோட்பாடுகளும் மனிதநேய சிந்தனைகளை விதைத்திருக்கின்றன. அவ்வாறு விதைக்கப்பட்டுள்ள நல்ல சிந்தனைகளின் வழியே செயற்பட்டு கிளைகளாகவும், பூக்களாகவும், கனிகளாகவும் காட்சி கொடுப்பது அவரவரது பொறுப்பாகும். ஆனால், அந்தப் பொறுப்புக்கள் நவீன கலாசாரங்களினால் மறக்கடிகப்பட்டு விட்டன.


2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அலைகளை விட மனிதநேய அலைகள் வேகமாக பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி சென்றபோதிலும் அதிலும் மனிதம் இழந்த செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டன. நாட்டில் அடிக்கடி இடம்பெறுகின்ற அனர்த்தங்களின்போது பாதிக்கப்படும் மக்களுக்கான உதவிக் கரங்கள் நீட்டப்படுகின்றன. ஆனால், அவற்றிலும் மனிதநேயம் என்ற போர்வையில் திரைமறைவில் விளம்பரங்களும,; வியாபாரங்களும் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


இவற்றின் பின்னணியில் சமகால சமூக மாற்றத்திற்கான இலத்திரனியில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி காரணியாக அமைந்திருக்கிறது. இவை மனித நேயத்தை மறக்கச் செய்துகொண்டிருக்கிறது என்பதை விட மரிக்கச் செய்துகொண்டிருக்கிறது எனக் கருதலாம். இவ்வாறு மரித்துக்கொண்டிருக்கும் மனிதநேயத்தை வாழ வைப்பற்காக ஐ.நா அமைப்பினால் ஒரு தினம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் உலக மனிதநேய தினமாகும்.


உடலினாலும,; உள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூறும் ஒரு நாளாக உலக மனிதநேய தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் இடம்பெறும் வன்முறைகளினாலும், போர் சூழல்களினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் அகதிகளாக்கப்பட்டும், கல்வி, பொருளாதாரம், சமூகவாழ்வு என்பவற்றை இழந்தும் பட்டினி, நோய் போன்றவற்றினால்; பாதிக்கப்பட்டும் வாழும் மில்லியன்; கணக்கிலான ஜீவன்களை நினைவு கூறுவும் வகையிலும், அவர்களின் துன்பங்களில் பங்குகொண்டு தங்களது இன்னுயிரை இழந்தவர்களையும், காயப்பட்டவர்களையும், வாழ்நாட்களை மனிதநேய உழைப்புக்காக தியாகம் செய்த சமூக சேவையாளர்களையும், செயற்பாட்டாளர்களையும் நினைவுபடுத்தும் ஒரு நாளாகவும் இம்மனிதநேய தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.


2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் ஒவ்வொரு வருடத்தினதும் ஆகஸ்ட் 19ஆம் திகதி; இத்தினம் உலகளவில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தாலும் நவீன சமூகக் கலாசார மாற்றம் மனிதத்தை வளரவடாது மெல்லச் சாவடித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு பேஸ்புக், வட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளக் தகவல் பரிமாற்றக்கலாசாரம் போதுமான சான்றாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதில் தவறேதும் இருக்காது.


சமூகவலைத்தள தகவல் பரிமாற்றங்களும் மரணிக்கும் மனிதத்துவமும்


மனிதகுலம் எங்கெல்லாம் வாழ்கிறதோ அங்கெல்லாம் மின்னனுவியல் தகவல் சாதனங்கள் மனிதகுலத்தோடு ஒட்டிக் காணப்படுகின்றன. இச்சாதனங்களோடு ஒட்டியதாகவே உலகை உள்ளங்கைக்குள் கொண்டுவந்துள்ள இணையப்பாவனையும் உள்ளடக்கப்படுகிறது. இணையப்பாவனை மனித தேவைகளின் பலவற்றை நிறைவேற்றிக்கொண்டிருந்தாலும். அதன் பயன்பாடு மனிதனுக்கு இன்றியமையாததாக இருந்தாலும் அவற்றின் பக்க விளைவுகளும். அதன் சிவப்புப் பக்கங்களும் பல தீமையான பின்விளைவுகளையும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் மனிதத்தை மரணிக்கச் செய்திருப்பதாகும்.

 

7.2 பில்லியன் உலக சனத்தொகையில் 3 பில்லியன் மக்கள் இணைத்தளப்பாவனையில் உள்ளனர். இதில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனவர்கள் 2.1 பில்லியனாகக் காணப்படுகின்றனர். அத்தோடு, 3.65 பில்லியன் மக்கள் கையடக்கத்; தொலைபேசியைப் பயன்படுத்துபவர்களாகவும் இவர்களில் 1.7 பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டெப்டலட் பயன்பாட்டாளர்களாவும் உள்ளதாக 2015ஆம் ஆண்டின் புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுகின்ற அதேவேளை, 47 வீதமான இணையத்தளப்பாவனையாளர்கள் பேஸ்புக் கணக்குடையவர்களாகவும் 600 மில்லியன் பேர் வட்ஸ்அப் பாவனையாளர்களாகவும் உலகளவில் உள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த எண்ணிக்கையானவை கடந்த 2 வருடங்களில் ஒரிரு பில்லியங்களாக அதிகரித்திருக்கும். இவ்வாறான நிலையில் இலங்கையின் 2 கோடி 20 இலட்சம் மக்கள் தொகையில் 2014ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம் 4.5 மில்லியன் பேர் இணையத்தளப் பாவனையாளர்களாக உள்ளனர். அத்தோடு, கையடக்கத்; தொலைபேசிப் பாவனையாளர்களின் எண்ணிக்கையும் சனத்தொகையின் எண்ணிக்கையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

 

இவ்வாறு அதிகரித்துள்ள இலத்திரனியல் தகவல் பரிமாற்ற சாதனங்களின் பயன்பாடானது பொது வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் பல விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தி விழும்பியங்களையும், மனிதநேயத்தையும் இழக்கச் செய்துகொண்டிருக்கிறது. தெருவில் இடம்வெறும் விபத்தொன்றில் சிக்கித் தவிக்கும் ஒருவரைக் காப்பாற்றுவதற்குப்பதிலாக அவரைப் படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றும் மனிதபிமானமற்ற நிலை உலகளவில் நடந்தேறுவதைக் காண முடிகிறது.

 

அண்மையில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் வீதி விபத்தில் சிக்கிய இளைஞனை காப்பாற்றுவதற்குப் பதிலாக சுற்றியிருந்தவர்கள் கையடக்கத் தொலைபேசியினால் படம் எடுத்து அதனைப் சமூக வலைத்தளங்களுக்கு பதிவேற்றுவதில் ஆர்வம் காட்டியிருந்ததோடு, கூடியிருந்து வேடிக்கையும் பார்த்துள்ளனர். இருந்தும், மனிதநேயம் கொண்டவர்கள் அவ்விளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவ்விளைஞனின் உயிர் பிரிந்தது. இவ்விளைஞனின் உயிர் இழப்பு தொடர்பில் சிகிச்சை அளித்த வைத்தியர் 'குறித்த இளைஞனை உரிய நேரத்திற்குள் வைத்தியசாலைக்கு கொண்டு வந்திருந்தார் அவனது உயிரைக் காப்பாற்றியிருந்திருக்க முடியும்' என்று தெரிவித்திருந்தார். படம் எடுப்பதில் காட்டிய துரிதம் அவ்விளைஞனைக்காப்பாற்ற சமூகவலைத்தள விளம்பர மோகம் கொண்டவர்களை அத்தருணத்தில் தடுத்துவிட்டது..

 

அதேபோன்று, கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னர் கிழக்கில் இடம்பெற்ற கோரவிபத்தொன்றில் உயிர் இழந்த இஸ்லாமிய வாலிபனின் விபத்துச் சம்பவத்தை படம் எடுத்து பதிவேற்றி அவற்றை ஏனையவர்களுடன்; ஒரு சிலர் பகிர்ந்து கொண்டதனால் கவலை கொண்ட அவ்விளைஞனின் பெற்றோர் அப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டாமென்றும் அவை தங்களை ஆறாத்துயரில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டு அறிக்கை விட்ட போதிலும், அப்பெற்றோரின் மனநிலையை, துயரத்தின் ஆழத்தைக் கருத்திற்கொள்ளாது ஒரு சில வாலிபர்கள் அவற்றினூடதாக தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டனர்.

 

அதேபோன்று கடந்த இரு மாதங்களுக்கு முன்னா தெற்கில் பேரினவாதிகள் மூட்டிய தீயில் இஸ்லாமிய சகோதரனின் வியாபார நிலையமொன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தபோது அவ்விடத்திற்குச் சென்ற அரசியல்வாதியொருவர் எரியும் தீயின் சுடலை பின்னணியக்காட்சியாகக் கொண்டு செல்பி எடுத்து வட்ஸ்அப் குழுமங்களில் பதிவேற்றியிருந்தார்.

 

தீயில் தனது பொருளாதாரம் கரும் வேதனையால் அச்சகோதரனும் அவனது குடும்பமும் கவலையில் துவண்டுபோயிருந்த நேரத்தில் குறித்த அரசியல்வாதி அதில் விளம்பரம் தேட முற்பட்டிருந்தார். இவ்வாறான சம்பவங்கள் மனிதநேயத்துக்கு மதிப்பளிக்காது நவீன கலாசார மோகத்தில் முந்திதிக்கொண்டு தங்களை விளம்பரப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற செயல்களாகும்.

 

இவை மாத்திரமின்றி ஒருவர் மரணித்துவிட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டுவிட்டாலோ அவரது மரணத்தில் கலந்துகொள்வதற்குப்பதிலாக அல்லது நோய்வாய்ப்பட்டவரை நேரில் சென்று உணர்வுபூர்;வ உடலிமொழியினூடாக ஆறுதல் சொல்வதற்கு, சுகம் விசாரிப்பதற்கு தங்களது கவலையையும், பிராhத்தனைகளையும் புரிவதற்குப்பதிலாக சமூவலைத்தள மொழிகளினூடாக பேஸ்புக்கிலும,; வட்ஸ்அப்லிலும் அனுதாபம் தெரிவிக்கும் கவலை வெளிப்படுத்தும், பிராhத்திக்கும் கலாசாரமானது தற்காலத்தில் மனித நேயம் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டுகொள்ளச் செய்கிறது.

 

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அல்லது உரிய இடத்துக்கச் செல்ல முடியாத தூரத்தில் இருப்பர்கள் தங்களது கவலையையும,; துயரத்தையும், பிரார்த்தனைகளையும் பகிர்ந்து கொள்வதற்காக இவ்வாறு பதிவேற்றினாலும் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியுமென்றாலும் கூட ஒரே வீதியில், ஓரே ஊரில் வசிக்கின்றவர்களும் இந்த மனிதம் இழந்த காலாசார மோகத்திற்குள் அடிமைப்பட்டு தற்களது கவலையையும் ஆறுதலையும் இத்தகைய சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிட்டு இருந்து விடுகிறார்கள்; என்பதே கவலையளிக்கிறது. இவ்வாறான கலாசார மோகத்திற்கு ஆட்பட்டவர்களில் இஸ்லாமியர்களும்; விதிவிலக்கல்ல.

 

அன்பையும், கருணையையும், மனிதநேயத்தையும் வலியுறுத்தும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களும் மனிதம் இழந்தவர்களாக சமகாலத்தில் வாழ முற்பட்டிருக்கிறார்கள் என்பது வேதனையளிக்கும் விடயமாகும்.

 


இஸ்லாமும் மனிதாபிமானமும்


இஸ்லாத்தில் மனிதத்துவம் என்பது மிக உயர்வானது, ஒரு மனிதனை வாழ வைப்பதும் அவனது வாழ்க்கைக்கு இயன்றளவு உதவி உபாகாரம் புரிவதும் அவனுக்கு ஏற்படும் துன்ப துயரங்களிலிருந்து அவனை விடுவிப்பதும்தான் இஸ்லாமிய மனிதத்துவக் கோட்பாடாகவுள்ளது. இதனை எத்தனை இஸ்லாமியர்கள் சம காலத்தில் பின்பற்றி வாழ்கிறார்கள்.


கடந்த ஓரிரு வடங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் நிறைந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு இஸ்லாமிய சமூக சேவை செயற்பாட்டாளர் ; அங்கிருந்த இஸ்லாமியர்களைப் நோக்கிக் கூறினார் 'நான் உங்களைப் பார்த்து வெட்கப்படுகின்றேன். ஏனெனில் அல்குர்ஆனும் நபி வழிகாட்டலும் உங்கள் பலரிடத்தில் இருப்பதை என்னால் காணமுடியாதுள்ளதென்று' அவரின் இக்கூற்று முஸ்லிம்கள் பெயரளவிலேயே இஸ்லாமியர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தியதாக அமைந்தது.


'எவரொருவர் தமது சகோதரருக்கு ஏற்படும் உலக துன்பங்களிலிருந்து அவரை விடுவிக்கிறாரோ இறைவன் அவருக்கு ஏற்படப்போகும் மறு உலக துன்பங்களிலிருந்து அவரை விடுவிக்கின்றான். மேலும் தமது சகோதரருக்கு உதவி புரியும் காமெல்லாம் அவருக்கு இறைவன் உதவி புரிந்துகொண்டேயிருப்பான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹதிஸ் கிரந்தத்தில் பதியப்பட்டுள்ளது.


அது மாத்திரமின்றி 'கருணையாளர்களின் மீது இறைவன் கருணை செலுத்துகிறான். எனவே நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை செலுத்துங்கள், வானில் உள்ளவர்கள் உங்கள் மீது கருணை காட்டுவார்கள் என இறைதூரர் (ஸல்) அவர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள்.


மனிதநேயப் பண்புகளை அல்குர்ஆனும் நபி வழியும் அழகாகக் கற்றுத்தந்தும் கூட ஏழைகளினதும், இயலாதவர்களினதும் துன்பங்களிலும், துயரங்களிலும் பங்குகொள்ளாது அவர்களை ஏலெடுத்தும்பார்க்காது பணம், பதவி, பட்டம் என்ற அளவுகோள்களின் அடிப்படையில் மனிதநேயத்தை அழகிய முன்மாதிரி இஸ்லாத்தை பின்பற்றுகின்ற நம்பில் பலா,; முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு சமூக வலைத்தளங்களின் அபாயங்களில் அகப்பற்றவர்களாக மனிதத்தை இழந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.


மக்கள் மீது கருணை காட்டாதவன் மீது இறைவன் கருணை காட்டமாட்டான் என்று கூறிய அண்ணல் நபி அவர்கள் மக்களை மதத்தால் அதிகம் கவர்ந்ததை விட மனிதத்துவத்தால், மனிதநேயத்தால் அதிகம் கவர்ந்தார்கள் என்பதே யதார்த்தமாகும்.


இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட நாம் வருங்கால சந்தியினர் இலத்திரனியல் தகவல் பரிமாற்றக் கலாசாரத்தினால் அள்ளுண்டு அடிமைப்பட்டு போய்விடாமல,; மனிதம் இழந்தவர்களாக மாறிவிடாமல் இருக்க அவர்களிடத்தில்; மனிதநேயப் பண்புகளை வளர்ப்பதற்கு முயற்சிப்பது எமது தார்மீகப் பொறுப்பாகும். அப்போதுதான் மெல்லச் சாவும் மனிதம்; காப்பாற்றப்படும். இருப்பினும், மனிதநேயப் பண்புள்ளவர்கள் வாழும் வரை மனிதம் வாழ்ந்துகொண்டேயிருக்கும் என்பதில் ஐயமில்லை.


விடிவெள்ளி – 21.08.2017


 

மெல்லச் சாவும் மனிதம்! மெல்லச் சாவும் மனிதம்! Reviewed by Madawala News on 8/22/2017 12:50:00 PM Rating: 5