Ad Space avaiable

பசுக்களை காப்பாற்ற  முஸ்லிம்களைக் கொல்லும் மோடி..


இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் அழித்தொழித்த பின் தனி இந்து ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற இந்து தீவிரவாத பிரிவான ராஸ்ட்ரிய சுயம் சேவா சங்கின் சுளுளு இன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா எங்கே சென்று கொண்டிருக்கின்றது. இதுதான் இன்று விடைகாண முடியாத வினாவாக உள்ளது.


இன்று நியாயமான சிந்தனை கொண்ட இந்துக்களும் முஸ்லிம்களும் பிரதானமாக எழுப்புகின்ற கேள்வி இதுவாகத் தான் உள்ளது.

இந்தியாவின் பல இடங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புக்கள், கூட்டாக கற்பழித்தல் என்பன முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தக் கேள்வி எழும்பியுள்ளது. 2014 ஜுன் 2 க்கும் 2017 ஜுன் 29க்கும் இடைப்பட்ட காலத்தில் 26 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பசுக்களை பாதுகாத்தல் என்ற சுலோகத்தின் கீழ் இந்தப் படுகொலைகள் நாளாந்தம் இடம்பெறத் தொடங்கிவிட்டன.


இந்த விடயத்தில் பொலிஸார் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். கொலை வெறியர்கள் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பஜ்ராங்தல் உறுப்பினர்கள் பிஜேபி அரசின் அரசியல் ஆதரவோடு கொலைகளைப் புரிந்துள்ளதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளனர்.


பத்மபிரியா கோவிந்தராஜன் என்ற பத்திரிகை எழுத்தாளர் இந்தியாவில் இன்று படுகொலைகள் பகிரங்கமாக இடம்பெறுவது மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


மிகவும் மோசமான ஒரு சம்பவம் பற்றி பத்திரிகை எழுத்தாளர் பொலினா திக்கனோவா 2017 ஜுலை 24ல் வெளியான “இந்தியாவில் முஸ்லிம் இனப் படுகொலை – நவீத் பதானின் காட்டுமிராண்டித் தனமான படுகொலை” என்ற தனது கட்டுரையில் இவ்வாறு வர்ணிக்கின்றார்.


‘கட்டுடல் இளைஞர் நவீத் பதானின் கொலை பற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கு இது தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது. பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ள இந்த மோசமான மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் காட்சிகள் நவீத் பதான் 11 பேர் கொண்ட ஒரு குழுவால் பட்டப்பகலில் கொத்திக் குதறி கொலை செய்யப்படும் காட்சிகளை உள்ளடக்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பாயில் இருந்து சுமார் 280 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தூலே எனும் இடத்தில் இந்தக் கொடூரம் இடம்பெற்றுள்ளது. பதானின் அசைவுகள் நின்று போன பிறகும் கூட கொலை வெறி கொண்ட கும்பல் தொடர்ந்தும் அவரை கொத்திக் குதறும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர் தலையில் சுடப்பட்டும் உள்ளார். இந்தக் காட்சிகள் பதிவான அருகில் இருந்த பாதுகாப்பு கெமராவை பொலிஸார் அங்கிருந்து அகற்றிச் சென்றுள்ளனர். இருப்பினும் இந்தக் காட்சிகள் எப்படியோ வெளியாகியுள்ளன. இணையத் தளங்களில் அது பரவலாகக் காணப்படுகின்றது.


33 வயதான நவீத் நகரின் மத்தியில் உள்ள ஒரு வீதியோர கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த போதுதான் இந்தக் கொடூரம் இடம்பெற்றுள்ளது. வாள்களோடு அவரை சூழ்ந்து கொண்ட கொலையாளிகள் ஈவு இரக்கமின்றி அவரை கொத்திக் குதறி கொலை செய்கின்றனர். கொலையாளிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளிலும் ஏனைய வாகனங்களிலும் சாவகாசமாகத்தப்பிச் செல்லுகின்றனர். நவீத் 27 தடவைகள் வாளால் வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தாக்குதலால் கடைக்குள் சுருண்டு விழுந்த அவரை வெளியே தரதரவென்று இழுத்து வந்து தாக்குகின்றனர். வீதியில் அப்போது தேங்கியிருந்த மழை நீரோடு அவரின் இரத்தமும் கலந்து ஆறாக ஓடுகின்றது. தாக்குதல்காரரில் ஒருவர் அவரின் இன்னொரு சகாவால் இழுத்தெடுத்து நிறுத்தப்படும் வரை வெறித்தனமாக தாக்கும் காட்சிகளும் தெளிவாகப் பதிவாகியுள்ளன.


மழை நீரோடு கலந்த இரத்த வெள்ளத்தில் நவீத்தின் உயிரற்ற உடல் மிதக்கும் காட்சியும் இன்னொரு பதிவில் உள்ளது. பட்டப்பகலில் பொது இடத்தில் நடந்த இந்த பயங்கரமான மூர்க்கத்தனமான கொலை அந்த நகரையே அச்சத்தில் உறைய வைத்துள்ளது.


15வயதான ஜுனைட் என்ற இளைஞன் கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஒருவார காலத்தில் அதை விடக் கொடூரமான நவீத் பதான் கொலை இடம்பெற்றுள்ளது. ஜுனைத் கொல்லப்பட்ட போதும் உள்ளுர் ஊடகவியலாளர்களும் பொலிஸாரும் அதை கண்டு கொள்ளவில்லை. புதுடில்லியின் மதுரா என்ற பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இம்பெற்றுள்ளது. ஆனால் சுமார் 200 பேர் கொண்ட ஒரு இந்து குழு எவருமே கொல்லப்படவில்லை என்று பாவனை செய்கின்றது. சுப்ரியா நாயர் என்ற பத்திரிகை எழுத்தாளர் இதுபற்றிக் குறிப்பிடுகையில் மோடி தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் இந்த நாட்டின் பண்டைய கால அரக்கர்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.;

மணிப்பூரில் இடம்பெற்ற இன்னொரு சம்பவத்தில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்துப் பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டு அவர்களிடம் இருந்த பணம் நகை என்பன சூறையாடப்பட்டுள்ளன.


இந்தச் சம்பவத்தில் 50 வயதான மொஹமட் ஷாகிர் என்பவர் மிக மோசமான எழும்பு முறிவு காயத்துக்கு ஆளாகியுள்ளதோடு தலையிலும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் இதுபற்றி கூறுகையில் ‘என்னுடைய வாழ்க்கையில் இது மறக்க முடியாத ஒரு பயங்கரம் என்று கண்ணீர் மல்க அச்சத்தால் ஏற்பட்ட நடுக்கத்தோடு குறிப்பிடுகின்றார். நாம் மயங்கி விழும் வரை அவர்கள் எம்மை தொடர்ச்சியாகத் தாக்கினார்கள். இவர்கள் முஸ்லிம்கள் இவர்களைக் கொல்லுங்கள் என்று ஒருவர் கூச்சலிட்டார். இரும்புக் கம்பிளாலும் பொல்லுகளாலும் அவர்கள் எம்மைத் தாக்கினர். எமது பொருள்களைத் திருடிக் கொண்டுஎமது பெண்களையும் மானபங்கப்படுத்தினர். உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்பட்ட எனது 17 வயது மகனைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


ராஜஸ்தானின் நடோலில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் முஸ்லிம் இமாம் (பள்ளியில் தொழுகை நடத்துபவர்) ஒருவர் நெற்றியில் திலகமிடுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார். நெற்றியில் திலகமிட மறுத்தால் அவர் இருந்த இடத்தில் இருந்து நகர விட முடியாது என அச்சுறுத்தப்பட்டுள்ளார்.


முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தக் கொடுமைகளால் பொது மக்கள் மட்டும் அன்றி அரசியல்வாதிகள் கூட திகைத்துப் போய் உள்ளனர். இது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஊPஐ (ஆ) தலைவர்களில் ஒருவரான பிரிந்த கரத் இந்துஸ்தான் இப்போது படுகொலை களமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இங்கே பசுக்களைப் பாதுகாப்பவர்கள் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கின்றனர். கிறிஸ்தவர்களையும் தலித்துகளையும் அடித்து அச்சுறுத்தி துன்புறுத்துகின்றனர்.


இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் படுகொலைகள் கொள்ளைகள் என்பனவற்றுக்கு எதிராக டில்லி மும்பாய் ஆகிய நகரங்கள் உட்பட பிரபல நகரங்கள் பலவற்றில் பிரபல கலைஞர்கள் நடிகர்கள் புத்திஜீவிகள் உட்பட பல்வேறு தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உலக நாடுகள் மற்றும் நகரங்களில் கூட இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்திய முஸ்லிம் சனத்தொகை மீதான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் இவர்களின் கோரிக்கை. இந்த விடயத்தில் மௌனம் காக்கும் இந்து தேசிய வாத அரசாங்கம் இவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் அறைகூவல்.


புதுடில்லியில் உள்ள விருது வென்ற குறும்பட தயாரிப்பாளர் சபா தெவான் என்பவரின் எண்ணக்கருவில் உருவானது தான் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள்.


மும்பாயில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்ற பிரபல நடிகையும் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான சபானா அஸ்மி இதுபற்றிக் கூறுகையில் ‘நாடு முழுவதும் பல கண்டிக்கத்தக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இந்தப் பிரம்மாண்டமான தேசத்தின் பிரஜைகள் என்ற வகையில் இந்தச் செயற்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. கொலைகாரக் கும்பல்களால் நடத்தப்படும் கொலைகளை அரசாங்கம் பொருத்துக் கொள்ளப் போவதில்லை அனுமதிக்கப் போவதில்லை என்ற தெளிவான செய்தியை அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை’ என்று அவர் கூறினார்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசில் இத்தகைய கொலைகள் இடம்பெறாது என்பது எதிர்ப்பார்க்கப்படாத ஒன்றல்ல காரணம் 2002 பெப்ரவரியில் இடம்பெற்ற குஜராத் முஸ்லிம் இன ஒழிப்பின் பிரதான சூத்திரதாரியே அவர்தான்.


2002 பெப்ரவரியில் கோத்ராவில் இடம்பெற்ற கபாரிய அளவிலான முஸ்லிம் படுகொலையில் நேரடி தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் நரேந்திர மோடி குஜராத் ரயில்வே நிலையத்தில் தேனீர் கடை ஒன்றில் ரயில் பயணிகளுக்கு தேனீர் விற்பனை செய்யும் ஊழியராகப் பணியாற்றியவர். சுளுளு செயற்பாட்டாளராக பின்னர் மாறி அதன் பின் படிப்படியாக உயர்ந்து குஜராத் மாநில முதலமைச்சர் ஆனார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டு வரும் காடையர் குழுக்களொடு நேரடி சம்பந்தம் உள்ளவராக நம்பப்படுபவர்.


பத்தி எழுத்தாளர் ப்ரவீன் சுவாமி குறிப்பிடுகையில் சிதைவுற்ற சடலங்களின் புகைப்படங்களும் எரிந்து சாம்பலான வீடுகளின் புகைப்படங்களும் குஜராத்தின் பாஸிஸவாத நிகழ்ச்சி நிரலுக்கான அடையாளங்களாகத் திகழுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட வலது சாரி இந்து மரணக் குழுக்களால் இவை நடத்தப்பட்டுள்ளன. ஒட்டு மொத்த மாநில அரச இயந்திரமும் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தத்தமது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு. குஜராத்தின் அரசியல் முகப்பரப்பில் வலது சாரி இந்து முத்திரை தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். அவ்வாறு நடந்தால் ஒட்டு மொத்த இந்தியாவும் குஜராத்தைப் போல் தோற்றம் அளிக்கும் நிலை எற்படும். முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டுத் தலங்கள் உட்பட அவர்களுக்கு சொந்தமான எல்லாமே சூறையாடப்பட்டன. அத்தோடு அவர்களுக்கு எதிரான கொலைகளும் கொள்ளைகளும் தொடர்ந்தன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரைவிலக்கணத்துக்கு அமைய இது மனித குலத்துக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு குற்றமாகும்.


முஸ்லிம்கள் உண்ண உணவின்றி அருந்த நீரின்றி காடுகளிலும் மலைகளிலும் தஞ்சம் புகுந்தனர். சில வேளைகளில் அவர்களுக்கு உணவாக புல் மட்டுமே கிடைத்தது. நகர்ப்புறங்களில் உள்ள முகாம்களை வந்தடைவதற்கு முன் அவர்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டது. உள்ளுர் பள்ளிவாசல்களிலும் பாடசாலைகளிலும் பலர் தஞ்சம் புகுந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் சிறிய பாடசாலைக் கட்டிடங்களிலும் கூடாரங்களிலும் அடைக்கப்பட்டனர். இன்னும் பல முஸ்லிம்கள் மயானங்களில் தஞ்சம் புகுந்து புதைகுழிகளுக்குள் மறைந்து வாழும் நிலையும் ஏற்பட்டது.


மே 2014ல் மோடி அவரின் பிஜேபி கட்சியுடன் இந்திய மத்திய அரசின் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றினார். அவருக்கு 31 வீதமான வாக்குகள் தான் கிடைத்தன. 69 வீதமானவர்கள் பிஜேபியை எதிர்த்தனர். இந்திய கூட்டாண்மை சுரண்டல் பேர்வழிகளாலும், செல்வந்த வர்த்தகர்களாலும், ஊடகங்களாலும் இந்த வெற்றி அரங்கேற்றப்பட்டது. இவர்களுக்கு மேலாக ஆர்எஸ்எஸ் இந்துவாத பாசிஸ வாதிகள் இவற்றை எல்லாம் திட்டமிட்டு செயற்படுத்தினர். அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் யுத்த வெறி கொண்ட கூட்டாண்மை பிரிவுகளும் மோடிக்கு துணையாக நின்றன. ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி கூட்டணியின் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் விரோத போக்கிற்கு இவை பக்க பலமாகச் செயற்பட்டன. காரணம் முஸ்லிம் நாடுகளில் அவர்கள் அரங்கேற்றி வரும் நிகழ்ச்சி நிரலுக்கு அவை பெரிதும் ஒத்துப் போவதாக இருந்தது.


சர்ச்சைக்குரிய இந்து மதகுருவாக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறிய யோகி ஆதித்யநாதை சனத்தொகை மிக்க உத்தர பிரதேசத்தில் தலைமைத்துவத்துக்கு மோடி தெரிவு செய்தார். ஆதித்யநாத் இதுபற்றி குறிப்பிடுகையில் இந்திய முஸ்லிம்களிடமிருந்து நாம் வாக்குரிமையை பறிப்போம். அவர்களை இரண்டாம் தர பிரஜைகளாக நாம் பிரகடனம் செய்வோம். பள்ளிவாசல்கள் அனைத்தும் இந்து கோயில்களாக மாற்றப்படும். பள்ளிவாசல்களில் அதான் ஒலிக்கப்படுவதற்கு (தொழுகைக்கான அழைப்பு) பதிலாக ஹர ஹர மகாதேவ என்ற கோஷம் எழுப்;பப்படும் என்றார். அது மட்டும் அல்ல முஸ்லிம் பெண்களை அவர்களது புதைகுழிக்குள் இருந்து வெளியே எடுத்து கற்பழியுங்கள் என்றார். இந்த உரைகள் அடங்கிய வீடியோ காட்சிகள் உள்ளன. இந்த உரை அதிர்ச்சி அளிப்பதாக மட்டும் அமையவில்லை. இந்தியாவில் வாழும் 300 மில்லியன் முஸ்லிம்களையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.


அவருடைய இந்த அறிவிப்பக்குப் பின் 2015 அக்டோபர் 23ல் புது டில்லியில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காஸியாபாத் மாவட்டத்தில் மீரத் நகர எல்லையில் உள்ள தல்ஹேட்டா கிராமத்தில் புதை குழியில் இருந்து ஒரு முஸ்லிம் பெண்ணின் சடலம் தோண்டி வெளியே எடுக்கப்பட்டது. அது இரண்டு தினங்களுக்கு முன் புதைக்கப்பட்ட ஒரு சடலம்.

இந்தியாவை இந்து ராஸ்ட்ரா அல்லது இந்து தேசம் என அழைக்க வேண்டும் என்பதே ஆதித்யநாதின் விருப்பம்.


தரைமட்டமாக்கப்பட்ட 16ம் நூற்றாண்டு பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தில் ராமாரின் ஆலயம் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். 1990 களில் இடம்பெற்ற இரத்தக்களரியை அடுத்து இந்த முயற்சி இடை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மோடியின் தெரிவாக இந்தியாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான தலித் இனத்தைச் சேர்ந்த ராம் நாத் கோவின்த கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்தியாவின் வேற்றுக் கிரக வாசிகள் என்று குறிப்பிட்டிருந்தார.; இன்றைய இந்தியாவிள் ஆட்சியில் உள்ள மூல வேர்கள் இப்படித்தான் உள்ளன.


தற்போது இடம்பெற்று வரும் அட்டூழியங்கள் பற்றி குறிப்பிட்ட டொக்டர் மஹ்மூத் மன்சூர் ஆலம் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த மூன்றாண்டுகளாக மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கார்வாப்ஸி, லவ்ஜிஹாத், பசுப்பாதுகாப்பு போன்ற ஆர்எஸ்எஸ் திட்டங்களின் பின்னணியில் அயோத்தியா போன்ற வன்முறைகள் இடம்பெறுவதற்கான திட்டங்கள் இருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.


எல்.கே அத்வானியின் அயோத்யா திட்டம் எமக்கு நன்றாக நினைவில் உள்ளது. அது நாட்டில் ஏற்படுத்திய இரத்தக் கறைகளும் மறக்க முடியாதவை. இப்போது பசு பாதுகாப்பு என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. மீண்டும் ஒரு அச்சம் மிக்க யுகத்துக்கு முகம் கொடுக்க நாம் தயாராக வேண்டி உள்ளது. ஆர்எஸ்எஸ் இன் திட்டம் எதுவாக இருப்பினும் சரியே அதில் எப்போதுமே பலியாகுபவர்கள் முஸ்லிம்களே.

பசுக்களை காப்பாற்ற  முஸ்லிம்களைக் கொல்லும் மோடி.. பசுக்களை காப்பாற்ற  முஸ்லிம்களைக் கொல்லும் மோடி.. Reviewed by Madawala News on 8/07/2017 11:30:00 PM Rating: 5