Kidny

Kidny

ரோஹிங்யா முஸ்லிம்கள் விட­யத்தில் சர்­வ­தேச சமூகம் செவிடாகவும் குரு­டாகவும் இருக்கக் கூடாது


மியன்மார் சிறு­பான்மை ரோஹிங்யா முஸ்­லி­ம்க­ளுக்கு எதி­ராக அந்­நாட்டு அரசின் மறை­முக ஆத­ரவில் இடம்­பெறும் திட்­ட­மிட்ட இனச்­சுத்­தி­க­ரிப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் செவிடாகவும் குருடாகவும் இருக்காது காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முன்­வர வேண்டும் என துருக்கி ஜனா­தி­பதி அர்­துகான் தெரி­வித்­துள்ளார். 

உலகின் மிகப் பெரிய 'நாடற்ற சிறு­பான்மை சமூ­க­மாக' அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீதான மியன்மார் இரா­ணு­வத்தின் வரம்பு மீறிய அட்­டூ­ழி­யங்கள், தாக்­கு­தல்கள் கடந்த சில தினங்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளன. 

உயிரைக் கையில் பிடித்த வண்ணம் கொத்துக் கொத்­தாக மக்கள் பங்­க­ளாதேஷ் நாட்டை நோக்கி அடைக்­கலம் கோரிப் படை­யெ­டுக்­கின்­றனர். 

ராக்கைன் மாநி­லத்தில் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் ஆயு­த­தா­ரி­க­ளுக்கும் இடையில் ஏற்­பட்­ட­தாக சொல்­லப்­படும் தாக்­கு­தலை அடுத்தே பதில் தாக்­குதல் நட­வ­டிக்­கைகள் முடுக்கி விடப்­பட்­டுள்­ள­தாக மியன்மார் அரசு நியாயம் கற்­பிக்க முனைந்­தாலும் அரசின் அறிக்­கையில் எவ்­வகை உண்­மையும் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. இது­வொரு திட்­ட­மிட்ட இன­வ­ழிப்பு எனவும் சமூக ஆர்­வ­லர்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர். மியன்மார் இரா­ணு­வத்தின் கொடு­மைகள் தாளாது 3,000 இக்கும் மேற்­பட்ட ரோஹிங்யா முஸ்­லிம்கள் பங்­க­ளாதேஷ் நாட்டில் அடைக்­கலம் கோரி தஞ்­ச­ம­டைந்­துள்­ள­தாக ஐ.நா. அக­திகள் அமையம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  

“மியன்­மாரில் அரசின் மறை­முக ஆத­ரவில் நடாத்­தப்­பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேசம் குரு­டா­கவும் செவி­டா­கவும் பாசாங்கு செய்­வது வருந்­தத்­தக்­கது” என அர்­துகான் மேலும் தெரி­வித்தார்.

அடுத்த மாதம் இடம்­பெ­ற­வி­ருக்கும் ஐ.நா. சபையின் பொது ஒன்­று­கூ­டலில் மியன்­மாரில் நடாத்­தப்­பட்டு வரும் இனச்­சுத்­தி­க­ரிப்பு தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அழுத்தம் கொடுக்­க­வி­ருப்­ப­தாக அர்­துகான் உறு­தி­ய­ளித்­துள்ளார். மியன்மார் அரசின் அத்­து­மீறல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யாக கண்­ட­னங்­களை பதிவு செய்­வ­தா­கவும், சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்பின் ஆத­ர­வுடன் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்­கான உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுக்க முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்­ள­வி­ருப்­ப­தா­கவும், இது தொடர்பில் சர்­வே­தேச நாடுகள் உத­விக்­க­ரங்­களை நீட்டும் என எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார். 

பௌத்த பேரி­ன­வா­தி­களால் வந்­தே­றிகள் என வசைபாடி ஒதுக்­கப்­பட்டு, வளங்கள் சூறை­யா­டப்­பட்ட நிலையில் வாழும் மியன்­மாரின் ராக்கைன் மாநில சிறு­பான்மை ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீதான கடந்த சில தினங்­க­ளாக தொடரும் தாக்குதல்கள் சர்வதேச கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. 

இக்குற்றச்சாட்டு தொடர்பில் உண்மை நிலை அறிய, ஆய்வு விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா. தலைப்பட்ட போதும் ஐ.நா. அதிகாரிகளுக்கான வீசா வழங்குவதை மியன்மாரின் ஆங்சாங் சூகி அரசு மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரோஹிங்யா முஸ்லிம்கள் விட­யத்தில் சர்­வ­தேச சமூகம் செவிடாகவும் குரு­டாகவும் இருக்கக் கூடாது ரோஹிங்யா முஸ்லிம்கள் விட­யத்தில் சர்­வ­தேச சமூகம் செவிடாகவும் குரு­டாகவும் இருக்கக் கூடாது Reviewed by Madawala News on 8/30/2017 07:39:00 PM Rating: 5