Ad Space avaiable

ரவி கருணாநாயக்க நல்லாட்சியை கொண்டுவர பாடுபட்ட வீரர் ..


கருணாநாயக்க தானாகவே முன்வந்து பதவிவிலக வேண்டிய தேவையில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்; 

சட்டபூர்வமாக குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்படாத எந்தவொரு நபரும் தனது பதவியை விட்டு விலக வேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை. ரவி குற்றம் செய்திருக்கலாம் செய்தியாதிருக்கலாம். 

அவ்வாறு குற்றம் செய்திருந்தால் சட்டப்படி அது நிரூபிக்கப்பட வேண்டும்.

மேலும், ரவி கருணாநாயக்க ஒரு பிச்சைக்காரர் அல்ல.அவர் வெற்றிகரமாக வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஒரு பெரும் செல்வந்த வர்த்தகர். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் மற்றும் தலைவர்கள் இணைந்து நல்லாட்சியை உருவாக்குவதற்கு ரவி கருணாநாயக்க முன்னணியில் நின்று பெரும் பங்காற்றியவர்.

எதிரணியினரின் பல்வேறு சவால்களுக்கு அஞ்சாது நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகப் பாடுபட்ட அரசியல்வாதியாகிய அவரை இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஆதரிக்க வேண்டுமே தவிர எதிர்த்தரப்பினர் போல அவமானப்படுத்தி பின்தள்ளிவிடக்கூடாது. 

அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் பதவி விலகல் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொழுதே அமைச்சர் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


ரவி கருணாநாயக்க நல்லாட்சியை கொண்டுவர பாடுபட்ட வீரர் .. ரவி கருணாநாயக்க நல்லாட்சியை கொண்டுவர பாடுபட்ட வீரர் .. Reviewed by Madawala News on 8/08/2017 08:47:00 PM Rating: 5