tg travels

எனக்கு ஞாபகம் இல்லை ; ராஜித சேனாரத்ன..


முகத்துவாரம் மீன் பிடி துறைமுகம் குத்தகைக்கு விடப்பட்ட சர்ச்சை தொடர்பில் தனக்கு ஞாபகம் இல்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.


அரசாங்க மதீப்பீட்டு திணைக்களம் முகத்துவாரம் மீன் பிடி துறைமுகத்தை மாதம் 17 லட்சம் வீதம் குத்தகைக்கு விடலாம் என மதிப்பீடு செய்திருந்த நிலையில் அதனை 125 ஆயிரம் ரூபாவுக்கு நிறுவனம் ஒன்றுக்கு 300 மாதங்களுக்கு பெற்றுக்கொடுத்த சர்ச்சை தொடர்பில் அவரிடம் வினவப்பட போது அவர் அதற்கு பதில் அளித்த அவர் ..

முகத்துவாரம் மீன் பிடி துறைமுகம் குத்தகைக்கு விடப்பட்ட சர்ச்சை தொடர்பில் எனக்கு ஞாபகம் இல்லை.நாம் எப்போதும் கொள்கை ரீதியான முடிவுகளையே எடுப்போம். 

வத்தளை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர் முகத்துவாரம் மீன் பிடி துறைமுகத்தை கடற்படை வசமாக்க கோத்தாபய ராஜபக்‌ஷ முயற்சித்தார்.

நாம் அதனை குத்தகைக்கு விட கொள்கை ரீதியில் முடிவெடுத்தோம்.அந்த வகையில் விலை கோரிய மிக உச்ச தொகைக்கு அது குத்தகைக்கு விடப்பட்டது என குறிப்பிட்டார்.

எனக்கு ஞாபகம் இல்லை ; ராஜித சேனாரத்ன.. எனக்கு ஞாபகம் இல்லை ; ராஜித சேனாரத்ன.. Reviewed by Madawala News on 8/26/2017 12:12:00 PM Rating: 5