tg travels

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது வேன் மோதியதில் காரினுள் இருந்த பெளத்த பிக்கு பலி.

 

திஸ்ஸ மாத்தறை பிரதான வீதியின் ஹுங்கம - மெதஎலிய பகுதியில், இன்று (05) அதிகாலை 4.45 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில், பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.


ஹுங்கம 7ஆம் கிராம சேவைப் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள சம்போதி விகாரையில் கடமையாற்றும் 49 வயது மதிக்கத்தக்க பிக்கு ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


மாத்தறை – வெலிகம பிரதேசத்தில்  மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த குறித்த பிக்கு, வரும் வழியில் தான் பயணித்த காரின் சில்லை மாற்றும் நிமித்தம் காரை நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேலையில், பின்னால் வந்த வானொன்று காரை மோதியுள்ளது.


இதன்போது, காருக்குள் இருந்த பிக்கு உயிரிழந்துள்ளார்.

சீதுவை பிரதேசத்தில் இருந்து கதிர்மாமம் நோக்கிச் சென்ற வானே இவ்வாறு காருடன் மோதுண்டுள்ளது.


சம்பவத்தில் வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பிக்குவின் உடலம் அம்பலாந்​தோட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது வேன் மோதியதில் காரினுள் இருந்த பெளத்த பிக்கு பலி. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது வேன் மோதியதில் காரினுள் இருந்த பெளத்த பிக்கு பலி. Reviewed by Madawala News on 8/05/2017 04:42:00 PM Rating: 5