tg travels

(வீடியோ இணைப்பு) அவதானம்.. அழகாக பொதி செய்யபட்ட பார்சலின் உள்ளே மர்மப்பொருள் வெடித்து, இயக்க முனைந்த சிறுவன் படுகாயம்.


வானொலிப் பெட்டியொன்று வெடித்ததில், 13 சிறுவனொருவன் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். மாலபே, பிட்டுகல பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு முன்பாக, கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வானொலிப் பெட்டியை வீட்டுக்கு எடுத்துச்சென்று, அந்த வானொலிப் பெட்டிக்கு மின்சாரத்தை கொடுப்பதற்கு முயன்றபோதே, இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக, மேலதிக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று, அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும், மேற்படி சிறுவன், பாடசாலை விடுமுறையைக் கழிப்பதற்காக, மாலபேயிலுள்ள தன்னுடைய பாட்டியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், பிட்டுகல பிரதேசத்தில் உள்ள காற்றுச் சீரமைப்பிகள் பழுதுபார்க்கும் நிறுவனத்துக்கு முன்பாக, மிகவும் அழகாகப் பொதியிடப்பட்ட பொதியொன்று கிடந்துள்ளது. அந்தப் பொதியை வீடுக்கு எடுத்துசென்ற அந்த சிறுவனை, அதனை பிரித்துப் பார்த்தபோது, அது ஒரு வானொலிப் பெட்டியாகும்.

அ​ந்த வானொலிப் பெட்டியை இயக்குவதற்காக, அதற்கு மின்சாரத்தை கொடுத்தபோதே, அப்பெட்டி வெடித்துச் சிதறியுள்ளது என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில், சிறுவனின் ​இரண்டு கைகள், நெஞ்சுப்பகுதி மற்றும் பாதங்களில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை, வெடித்து சிதறிய அந்த வீட்டின் அறையில், மேசை உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கும், அறையின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் சுவர்களுக்கும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெடித்துச் சிதறியதை அவதானிக்கின்ற போது, மின்சார இணைப்பை ஏற்படுத்திய உடனேயே வெடிக்கும் வகையில், இரும்பு தகடுகளை கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் ​பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதாவது, இரும்பு தகடுகளைக் கொண்டு, ​வானொலிப் பெட்டியை போலவே, இந்த மர்மப் பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சந்தேகம் கொள்வதாக தெரிவித்த பொலிஸார், இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் விசேட பகுப்பாய்வாளர்களைக் கொண்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ..
(வீடியோ இணைப்பு) அவதானம்.. அழகாக பொதி செய்யபட்ட பார்சலின் உள்ளே மர்மப்பொருள் வெடித்து, இயக்க முனைந்த சிறுவன் படுகாயம். (வீடியோ இணைப்பு) அவதானம்.. அழகாக பொதி செய்யபட்ட பார்சலின் உள்ளே மர்மப்பொருள் வெடித்து, இயக்க முனைந்த சிறுவன் படுகாயம். Reviewed by Madawala News on 8/31/2017 09:10:00 AM Rating: 5