tg travels

26 நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்குபற்றிய போட்டியில் தங்கம் வென்ற இலங்கையர்... இவரின் வெற்றி நமக்கு வேண்டாம் என கூறுகிறது இலங்கை பாடி பில்டிங் சம்மேளனம்.


ஆசிய பகிரங்க உடற்கட்டமைப்பு போட்டியில் லூஷன் அன்டன் சம்பியன்
வெற்றியை ஏற்க முடியாது என்கிறது இலங்கை உடற்கட்டமைப்பு சம்மேளனம்.

தென் கொரியாவின் சோஹ்ல் நகரில் நடைபெற்ற ஆசிய பகிரங்க உடல் கட்டமைப்பு போட்டியின் 100 கிலோ  எடைக்குட்பட்ட   இப்போட்டித் தொடரில் சம்பியனாகவும் தெரிவானார் லூஷன் அன்டன் .

கடந்த 2014 ஆம் ஆண்டு  தங்கப்பதக்கம் வென்ற இலங்கையின் லூஷன் அன்டன் புஷ் பராஜ், 8 பிரிவுகளின் கீழ் கொழும்பில் நடைபெற்ற
ஆசிய உடல் கட்டமைப்பு தெரி வுக்கான போட்டியில் , லூஷன் புஷ்பராஜ் தங்கப் பதக்கம் வென்றவ ராவார்.

மேலும், 2013 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆணழகன் பட்டத்தையும் வென்
றிருந்தார். 30 வயதான இவர் , ஒமானில் தொழில் புரிந்து வருவதுடன் ராகமை பெசிலிக்கா வித்தியாலயத்தின் பழைய மாணவருமாவார்.

மேற்படி கொரியா  போட்டி நிகழ்வில் 26 நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான வீர வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, இப்போட்டி நிகழ்வானது உத்தியோகப்பற்றற்றது. இது சட்ட விரோதமானது எனவே அவரின் வெற்றி இலங்கைக்கு சொந்தமானது அல்ல என இலங்கை உடற்கட்டமைப்பு சம்மேளன தலைவர் பெர்னாண்டோ சிங்கள நாளிதழொன்றுக்கு தெரிவித் துள்ளார்.

 குறித்த சிங்கள நாளிதழுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது,

 தென் கொரியாவின் சோஹ்ல் நகரில் நடைபெற்ற ஆசிய பகிரங்க உடல் கட் டமைப்பு போட்டியானது, உலக உடற் கட்டமைப்பு மற்றும் உடல் ஆரோக்கிய சம்மேளனத்திலிருந்து பிரிந்துசென்ற குழுவொன்றினால் ஏற்பாடு செய்யப் பட்டதாகும். இது உத்தியோகப்பற்றற்றது.

மேலும் இது சட்டத்துக்கு எதிரானது. அத்துடன் லூஷன் அன்டன் புஷ் பராஜ், இலங்கை உடற்கட்டமைப்பு சம்மேளனத்தினால் ஆயுட்கால தடை விதிக்கப்பட்டவராவார்.

ஆகவே இவரின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன், இப்போட்டியானது உலக உடற்கட்டமைப்பு சம்மேளனத்தால் நடத்தப்படவில்லை. எனவே, இப் போட்டி நிகழ்வு சட்ட விரோதமானது.

இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெளிவுபடுத்துவதற் கான நடவடிக்கைகளை நாம் மேற் கொண்டுள்ளோம்

 என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி யொன்றில் இலங்கை உடற்கட்ட மைப்பு சம்மேளனத்திற்கெதிராக விமர்சனங்களை எழுப்பிய குற்றம் காரணமாக, லூஷன் புஷ்பராஜ் ஆயுட் கால தடைக்குள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


26 நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்குபற்றிய போட்டியில் தங்கம் வென்ற இலங்கையர்... இவரின் வெற்றி நமக்கு வேண்டாம் என கூறுகிறது இலங்கை பாடி பில்டிங் சம்மேளனம். 26 நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்குபற்றிய போட்டியில் தங்கம் வென்ற இலங்கையர்... இவரின் வெற்றி நமக்கு வேண்டாம் என கூறுகிறது  இலங்கை பாடி பில்டிங் சம்மேளனம். Reviewed by Madawala News on 8/27/2017 11:54:00 AM Rating: 5