Kidny

Kidny

காணி / வீடு ஒன்றை வாங்கும் போது ஏமாறாமல் இருக்க கடைபிடிக்க வேண்டியவை ...


காணி / வீடு  ஒன்றை ஒருவர் இன்னுமொருவரிடமிருந்து விலைக்கு வாங்க வேண்டுமானால் முதலில் விற்பவருக்கு அக்காணியில் உரித்து (Title) உண்டா? எனப் பார்க்க வேண்டும். அதனை காணிப் பதிவுக்காரியாலயத்தில் பார் வையிடலாம்.

காணிப் பதிவுக்காரியாலயத்தில் உரித்தைப் பார்வையிடும்போது தற்போது விற்கப் போகிறவருக்கு அக்காணி எவ்வாறு வந்தது என்றும் அதற்கு முன்னர் உள்ளவருக்கு எவ்வாறு அக்காணி உரித்தானது என்றும் கண் டுபிடிக்கலாம்.

பரம்பரையாக இந்தக் காணியின் உரித்து தற்போது உரித்துள்ளவருக்கு கிடைத் ததா? அல்லது உரித்துள்ள ஒருவரிடம் இருந்து அக்காணி இவருக்கு வந்ததா? என்பதை யெல்லாம் கண்டு கொள்ளலாம்.


இவ்வாறு உரித்தை ஏன் கண்டு பிடிக்க வேண்டும்? என்ற வினா பலர் மனதிலும் எழலாம். உரித்தில்லாத ஒருவரிடமிருந்து காணியை வாங்கினால் அக்காணிக்கு உண்மை யான உரித்துள்ளவர் வழக்கை எந்த நேரமும் தாக்கல் செய்யலாம்.

இதனால் உரித்தில்லாதவரிடமிருந்து காணி வாங்கியிருந்தால் வாங்கியவர் அக்காணியை இழக்க வேண்டும் என்ற எண்ணத் தினாலாகும்.

தற்போது நாட்டில் பல இடங்களிலும் களவான முறையில் காணிகளை விற்பது நடைபெறுகிறது. பல்வேறு நீதிமன்றங்களிலும் இது சம்பந்தமான வழக்குகள் கிடப்பில் கிடக்கின்றன.


காணியின் உரித்து சம்பந்தமான வழக்கை உரித்து நிறுவல் வழக்கு என அழைப்பர். உரித்து நிறுவல் வழக்கில் நீதிமன்றம் பார்ப்பது என்னவெனில் உரித்து உள்ளவரிடம் இருந்து உரித்து மற்றவருக்குச் சென்றதா? என்பதே யாகும்.

ஆகவே உரித்து நிறுவல் வழக்கின் உரித்துள்ளவரே காணியை மற்றவருக்கு உரித்து மாற்றம் செய்திருக்க வேண்டும். இதனை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் விளக்கலாம்.

A என் பவன் ஒரு காணியின் மூலச் சொந்தக்காரன் பின்னர் B என்பவனுக்கு A அக்காணியை விற் கிறான். உடனே B என்பவன் அக்காணியின் உரித்தாளன் ஆகிறான்.

சில காலத்தின் பின்னர் B அக்காணியை C க்கு விற்கின்றான். இப்போது C உரித்தாளன் ஆகிறான். இவ்வாறு உரித்துள்ள ஒருவரே மற்றவருக்கு உரித்தை மாற்றும் போது காணியின் உரித்து சட்டப்படி மாறுகிறது. உரித்துப் பட்டியல் என இது அழைக்கப்படுகி நிறது.


இச்சந்தர்ப்பங்களில் காணியின் உண்மை யான உரித்தாளன் தான் விற்காமல் இன்னுமொ ருவருக்கு அட்டோர்னித் தத்துவத்தை வழங்கி காணியை விற்பனை செய்கிறார். அவ்வாறு அட்டோர்னித் தத்துவக்காரன் காணியை விற் கும்போது உரித்தாளன் காணியை விற்பதில்லை.


உரித்தாளனுக்கு பதிலாக உரித்தில்லாத ஒருவர் அட்டோர்னித் தத்துவம் என்ற ஆவணத்தின் உதவியுடன் காணியை விற்கிறான். இவ்விற் பனை சரியென எடுத்துக் கொண்டாலும் ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது உரித்துள்ளவன் காணியை விற்க வில்லை. உரித்துள்ளவரின் முகவரே காணியை விற்றுள்ளார்.

உரித்துப் பட்டியல் இவ்விடத்தில் முறிவடைகிறது. இவ்விடத்தில் தான் ஆபத்து உள்ளது. ஆபத்து என்னவெனில் அட்டோர்னித் தத்துவக்காரன் உரித்துள்ளவரா? எனப் பார்த்தால் இதற்கு விடை இல்லை என்பது கிடைக்கும். அட்டோர்னித் தத்துவத்தின் கீழ் காணியை விற்பனை செய்ததால் உரித்து மாற்றம் அடைந்ததா?

இதற்கு விடை ஆம் என்று கூற வேண்டுமானால் அட்டோர்னித் தத்துவப் பத்திரம் அட்டோர்னித் தத்துவ சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளக் கூடியதாயுள்ளதா? எனப் பார்க்க வேண்டும். ஒரு அட்டோர்னித் தத்துவப் பத்திரம் பதிவாளர் நாயகத்தின் காரியாலயத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது மட்டும் போதாது அவ் அட்டோர்னித் தத்துவப் பத்திரம் அட்டோர்னித் துவ சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின் படி நிறை வேற்றப்பட்டதா? என்பதை நிரூபிக்க வேண்டும். அட்டோர்னித் தத்துவப் பத்திரம் சட்டப்படி ஏற் கப்பட வேண்டுமானால் எப்படி நிறைவேற்றப்பட வேண்டும்?


அட்டோர்னித் தத்துவப் பத்திரம் ஒன்று எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டுமென்று நாடுகள் சட்டங்களை இயற்றியுள்ளன. இலங் கையில் 1902 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 4 ஆம் இலக்க அட்டோர்னித்ததுத்துவப் பத்திரக் கட்டளைச் சட்டத்தில் அட்டோர்னித் தத்துவம் ஒன்று எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டு மென்று கூறப்பட்டுள்ளது. இக்கட்டளைச் சட்டம் 1902 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திக தியிலிருந்து அமுலுக்கு வந்ததுடன் 1913 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க திருத்தத்தின்படியும் 1939 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க திருத்தத் தின்படியும் 1978 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட விதிகளின் படியும் அமுலில் உள்ளது.


இச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின்படி அட்டோர்னித் தத்துவத்தை இன்னுமொருவ ருக்கு கொடுப்பவர் இரண்டு சாட்சிகளின் முன் னிலையிலும் நொத்தாரிசு, சமாதான நீதிவான், பதிவாளர், பிரதிப்பதிவாளர், நீதிபதி, நீதிவான், உயர்ஸ்தானிகர் அல்லது நாட்டுப் பிரதிநிதி ஆகிய ஒருவரின் முன்னிலையில் அதனை வழங்கியிருக்க வேண்டும்.


அப்படி வழங்கிய அட்டோர்னித் தத்துவத்தை பெற்றவர் சிற்சில கருமங்களைச் செய்ய இயலாது. உதாரண மாக அட்டோர்னித் தத்துவத்தை வழங்கி ஒரு விவாகரத்து வழக்கை, கொடையை சில சங் தர்ப்பங்களில் வங்கிக் கடன் போன்றவற்றை அட்டோர்னித்தத்துவக்காரர் செய்ய முடியாது. அட்டோர்னித் தத்துவப்பத்திரம் இரண்டு வகையில் கொடுக்கலாம்1. பொது அட்டோர்னித் தத்துவப்பத்திரம் i. விசேட அட்டோர்னித் தத்து வப்பத்திரம் என்பதே அவையாகும். அட்டோர்னித் தத்துவத்தை வழங்கும்போது பொது அட்டோர்னித் தத்துவத்தை வழங்குவதே சிறப்பாகும்.


 ஏனெனில் அவ் அட்டோர்னிப் பத்திரத்தில் சகல விடயங்களையும் எடுத்துக் கூறலாம். சில வேளைகளில் வங்கிகள் அட்டோர்னித் தத்துவப் பத்திரத்தை பரீட்சித்து கடன் வழங்குவதை மறுக்கலாம். அல்லது அணு மதிக்கலாம். நீதிமன்றங்களில் ஒருவருக்காக இன்னுமொ ருவர் அட்டோர்னித் தத்துவத்தின் கீழ் தோன்ற வேண்டுமானால் பொது அட்டோர்னித் தத் துவத்தின் பெயரிலேயே தோன்ற வேண்டும் என சிவில் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் 25 ஆம் பிரிவு கூறுகிறது.

அத்துடன் அட்டோர்னித் தத்துவத்தை வழங்குகிற வரும் பெறுபவரும் ஒரே நீதிமன்ற நியாயாதிக் கத்திற்குள் வசிப்பின் அந்த அட்டோர்னித் தத்து வத்தைப் பெற்றவர் நீதிமன்றத்தில் அட்டோர்னித் தத்துவக்காரர் சார்பில் தோன்ற முடியாது. வெளிநாட்டு அட்டோர்னித் தத்துவப்பத்திரம் அட்டோர்னித் தத்துவப்பத்திரம் வெளிநாட்டில் இருந்தும் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப் புவது வழக்கம்.


அத்தகைய அட்டோர்னித் தத் துவப்பத்திரம் அந்நாட்டில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் முன்னிலையில் அல்லது இலங்கை தூதுவர் முன்னிலையில் நிறை வேற்றப்பட வேண்டும் அல்லது அங்ாநாட்டு சொலிசிட்டர் ஒருவரின் முன்னிலையில் நிறை வேற்றப்பட வேண்டும். இதற்கு காரணம் வெளி நாட்டு அட்டோர்னித் தத்துவத்தில் கையொப்பம் இட்டுள்ள இலங்கைத் தூதுவரின் அல்லது உயர்ஸ்தானிகரின் கையொப்பம் உண்மையா னதா? எனப் பரீட்சிக்கவேயாகும். இதற்கென காரியாலயங்கள் வெளிநாட்டு அமைச்சில் உள் ளன. வெளிநாட்டு அமைச்சு அக்கையொப்பங் களை உறுதிப்படுத்த வேண்டும். சில வேளைகளில் அந்நாட்டு சொலிசிட்டர் ஒருவர் அட்டோர்னித் தத்துவப்பத்திரத்தில் கையொப்பம் இட்டு இருக்கலாம். அவர் கையொப்பம் இடும் காலங்களில் நீதிமன்றத்தில் தெரிபட உரிமையுள்ளவராக இருக்கிறாரா என்பதைப்பார்க்க அந்நாட்டு சட்டவாதிகளின் சங்கம் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.


ஆனால் இவற்றை அப்படியே கடைப்பிடிக்காமல் ஒருவர் ஒரு சொலிஸிஸ்டரிடம் கையொப் பத்தை வாங்கி இலங்கைக்கு அனுப்புவதும் அதன் கீழ் காணிகளை விற்பதும் நடைபெறு வதை நாம் காணலாம். ஆனால் அட்டோர்னித் தத்துவப்பத்திரம் சவாலுக்கு உட்பட்டால் அத்த கைய அட்டோர்னித் தத்துவப் பத்திரத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்ட உறுதி செல்லுபடியா காது எனத் தீர்க்கப்படும்.

 உயர் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்ட வழக்கான லத்தீப் - எதிர் மன்சூர் இதற்கு நல்ல உதாரண மாகும். இவ்வழக்கு அநுராதபுரத்தில் நடந்தது. இவ்வழக்கில் எழுப்பப்பட்ட வினா நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அட்டோர்னித்தத்துவப்பத் திரம் சட்டப்படி நிறைவேற்றப்பட்ட ஆவணமா?

அதன் கீழ் நடைபெற்ற காணி விற்பனை செல்லு படியாகுமா? என்றாகும். அனுராதபுர முதனிலை நீதிமன்றம், மேன்மு றையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியன இவ்வினாக்களை வினவி விற்பனை செல்லாது எனத் தீர்த்தன. உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மூவர் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். அவர்கள் தமது தீர்ப்பில் கூறியவற்றின்சாரம் இதுவாகும்.

"ஆவணம் ஒன்று நிறுவுதலுக்கு உட்பட்டது (Subjects to Proof) 6T600) figliosip556) (65if விக்கப்பட்டால் அதனை எவ்வாறு நிரூபிப்பது என்பது சிவில் நடவடிக்கை முறைச்சட்டக்கோ வையின் 154 ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி சாட்சியாளர்கள் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சிக் கூண்டில் நின்று சாட்சியம் கூற வேண்டும். சாட்சியாளராக வர வேண்டியவர்கள் யார் எனில் நொத்தாரிஸ் சாட்சியாளர்களாக கையொப்பம் வைத்தவர்களேயாவார்.

அவர்கள் இல்லாத பிறரால் இது நிரூபிக்கப்பட முடியாது என்றாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் எடுகோள்கள் (Presumption) epGotò fa) Figi Luis Gifisò ஆவணத்தின் பிரதிஒன்று இருந்தால் மூலம் (Original) இருந்திருக்க வேண்டும் என்பது ஏற் கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றன. இதனை நீதிமன்றங்கள் ஏற்பதில்லை. ஏனெனில் ஒரு ஆவணத்தின் நம்பகத் தன்மையானது எடுகோளை விட மிக உயர்ந்த நிலையில் நிரூபிக்க வேண்டும் என்பதினாலாகும். இவ் ஆவணத்தில் கையொப்பமிட்டவர் இவர்தானா என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூ பிக்க வேண்டும் என மோகன் சட் என்ற இந்திய வழக்கில் தீர்க்கப்பட்டது.


காரியாலயத்தில் இருந்து ஒரு பிரதியை எடுத்தால் அது மூலத்தின் பிரதி என்பது சில சமயங்களில் உண்மையாயினும் அம் மூலப் பிரதியை நிறைவேற்றியவர் உரியவர்தானா? என்பதற்கு சாட்சியங்கள் வேண்டும். வெளிநாட்டு ஆவணங்களைப் பொறுத்த வரை சாட்சியியல் சட்டத்தின் 45 ஆம் பிரிவின் படி விசேட நிபுணர்களின் சாட்சியம் கேட்கப் பட்டு நிரூபிக்கப்படலாம்.


இம்முறையிலேயே அட்டோர்னித் தத்துவப்பத்திரம் நிரூபிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளனர். தற்போதைய உலகில் தொழில் நுட்பங்கள் பல்கிப் பெருகியுள்ளதால் சில போலியான ஆவணங்கள் அசல் ஆவணங்கள் போல் தயாரிக் கப்பட்டு உரியவரின் கையொப்பத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் காணப்படும் வகையில் நாட்டில் உலாவுவதை நாம் காணலாம். கடன் அட்டைகள், போலி நாணயங்கள் தயாரிக்கப் படும் இவ்வுலகில் போலி ஆவணங்கள் தயாரிக் கப்படுவது கஷ்டமான வேலையல்ல.

ஆகவே அட்டோர்னித் தத்துவப்பத்திரம் ஒன்று உண்மை யானதா என பரிசீலிக்காமல் காணியை வாங் குபவர்கள் பின்னர் தலையில் கையை வைக்க வேண்டிய நிலைக்கு மாறுவதும் உண்டு. அட்டோர்னித் தத்துவத்தால் எப்போது பிரச்சினை ஏற்படுகிறது.


அட்டோர்னித் தத்துவத்தைக் கொடுத்தவர் அதனை தான் தான் வழங்கினார் என்று ஏற் றுக்கொண்டால் பிரச்சினையில்லை. நீதிமன்றில் அட்டோர்னித் தத்துவக்காரர் பதிலி பத்திரத்தை அணைக்கும் போது அப்பதிலிப் பத்திரத்தை அணைக்க அவருக்கு தத்துவம் கொடுக்கப்பட் டுள்ளதா என பார்க்க வேண்டும். கொடுக்காமல் வேறு ஒரு வழக்கிற்குக் கொடுத்த அட்டோர்னித் தத்துவப்பத்திரத்தை வைத்து புதிய வழக்கொன் றுக்கு பதிலிப் பத்திரம் கொடுத்தால் அது பிழை யானதாகும்.


காணியை மாற்றம் செய்யும்போது இதனை காணியை வாங்குபவர் கவனிக்க வேண்டும். அட்டோர்னித் தத்துவம் யாருக்கு வழங்கப்பட் டதோ அவர் அத் தத்துவத்தில் உள்ள கடமை களை அல்லது பணிகளை செய்ய வேண்டும். அட்டோர்னித் தத்துவக்காரர் தனக்கு வழங்கப் பட்ட தத்துவத்தை வேறு ஒருவருக்கு கையளிக்க முடியாது. மேலும் காணி உரித்து மாற்றத்தில் அட்டோர்னித் தத்துவக்காரர் காணிச் சொந்தக் காரரின் பெயரைக் குறிப்பிடாது தனது சொந்தப் பெயரில் கையெழுத்து இட்டால் அது செல்லாது
என்றும் அது காணிச் சொந்தக்காரனை கட்டுப் படுத்தாது என்றும் சின்னத்தம்பி எதிர் - ஜோன் புள்ளே வழக்கில் தீர்க்கப்பட்டுள்ளது.


ஆதனம் ஒன்றை விற்கிற போது ஆதனத்தின் சொந்தக் காரரின் பெயரில் ஆதனம் எழுதப்பட வேண்டும். உறுதியின் இறுதியில் ஆதனச் சொந்தக்காரரின் "அட்டோர்னித் தத்துவக்காரர்" என்று எழுதப் பட்டு அட்டோர்னித்தத்துவக்காரர் கையொப்பம் இட வேண்டும். மேலேயுள்ள காரணங்கள் நிலவும்போது அட்டோர்னித்தத்துவத்தில் பிரச்சினை எழும் காணி ஒன்று மோசடி தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2 ன் கீழ் மாற்றம் செய்யப்பட வேண்டும் அட்டோர்னித் தத்துவப் பத்திரம் மோசடி தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிறைவேற் றப்படுவதில்லை

. ஆயின் காணி ஒன்று மோசடி தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2 ஆம் பிரி வின்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. உண்மையான உரித்தாளன் காணியை மாற்றம் செய்யும்போது அட்டோர்னித் தத்துவம் பற்றிய பிரச்சினை எழுவதில்லை. அட்டோர்னித் தத்துவத்தின் கீழ் ஒருவர் காணியை மாற்றும் போது அந்த பிரச்சினை எழு கிறது. மோசடி தடுப்புக் கட்டளைச் சட்டம் உரித்து மாற்றம் ஒன்று நடைபெறும்போது காணிச் சொங் தக்காரனும் இரண்டு காட்சிகளும் நொத்தாரிஸ் முன்னிலையில் கையொப்பம் இட்டே காணியை மாற்ற வேண்டும்.


அட்டோர்னித் தத்துவக்காரர் காணியை மாற்றும்பொழுது அவர் காணியின் உரிமையாளராக இல்லை. முகவராகவே இருக் கிறார். அவருக்கும் மாற்றப்படும் காணியின் உரித்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே அவர் தவறு செய்தால் காணியின் உரித்து மாறாது. இதற்கு காரணம் காணி ஒன்றின் உரித்தை மாற்ற மோசடி தடுப்புக் கட்டளைச் சட்டம் ஒரு விதியைக் கூற அதற்கு முரணான முறையில் அட்டோர்னிதத்துவக்காரர்காணியின் உரிமையை மாற்ற இடம் அளிக்கப்பட்டிருப்பதே யாகும்.


ஆகவே அட்டோர்னித் தத்துவத்தின் கீழ் காணியை வாங்குவது தற்போது பரவலாக நடை முறையில் உள்ளது. ஆயினும் அது ஆபத்தானது.
விசேடமாக பொய்யான வழிகளில் அட்டோர்னித் தத்துவத்தை தயாரிக்கக் கூடியதாக இருப்பதால் காணிகளின் விற்பனை மோசடியாகவும் காணப் படுகிறது. நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலு வையில் உள்ளன. விசேடமாக காணிச் சொந்தக்காரர் வெளி நாட்டில் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதை திட்டவட்டமாகத் தெரியாமல் இலங் கையில் உள்ள ஒருவரிடம் காணியை வாங்கு வது ஆபத்தானது.


தொகுப்புரை அட்டோர்னித் தத்துவப்பத்திரம் நம்பகத் தன்மையைக் கொண்டுள்ளது என்ற எடுகோ ளிலேயே பிறரால் ஏற்கப்படுகிறது. சில சந் தர்ப்பங்களில் இவ் எடுகோள் பிழை பட்டால் அட்டோர்னித்தத்துவப்பத்திரத்தை வழங்கியவர் முன்வந்து நான்தான் அப்பத்திரத்தை வழங்கிய தாக கூறினால் பிரச்சினை தீர்ந்துவிடும். உண் மையான அட்டோர்னி தத்துவத்தில் இப்பிரச்சி னைகள் எதுவும் இருக்காது. தற்போது உலக நாடுகளின் தொடர்புகள் தொழில்கள் மற்றும் அதை ஒத்தவை விசாலித் துள்ளன. சிலவேளைகளில் முதல்வரே வந்து காரியங்களைச் செய்ய முடியாமல் இருக்கும். விசேடமாக பாரிய தொழில் நிறுவனங்கள் அட்டோர்னித் தத்துவத்தின் கீழ் பல நாடுகளில் தமது தொழிலை முதலீடு செய்கின்றன. இச்சதர்ப்பத்தில் பாரிய மூலதனத்தை அவை நாடு களில் முதலீடு செய்கின்றன.


 சிலரை நம்பி அவர் களுக்கு அட்டோர்னித் தத்துவத்தை வழங்கி தொழிலை நடத்துகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் சிலர் போலியான அட்டோர்னித் தத்துவப் பத் திரத்தை தயாரித்து அவர்களது மூலதனத்தை சூறையாட இடமிருக்கிறது. அப்படியொருவரின் மேல் பாரிய வழக்கு ஒன்று இலங்கையில் உள் ளது. FCID வழக்கும் ஒன்று இருப்பது நாம் அறிந் ததே. ஆரம்பத்தில் அட்டோர்னித் தத்துவப்பத்திரம் தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமும் வழங் கலாம்
என்ற கருத்து ஒன்றும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.


ஆனால் நாம் மேலே காட்டிய வழக்கான 6055) - 615 if idodrett S.C. Appeal No. 104/05 இல் என்ற வழக்கில் உயர் நீதிமன்றம் இவ்வாறு இலத்திரனியல் ஊடகம் மூலம் அட்டோர்னித்தத் துவப்பத்திரம் வழங்க முடியாது என்று கூறியது. ஆயினும் இன்றைய சூழ்நிலையில் ஒருவர் தனது வியாபார நடவடிக்கைகளை அல்லது நில புலங்களை தனியாக நிருவகிப்பது என்பது கஷ் டமான காரியமாகும். ஆகவே அதற்கு அனுசர ணையாக இருப்பது அட்டோர்னித்தத்துவப்பத்தி ரமாகும். நம்பகத்தன்மையான அட்டோர்னித் தத் துவப்பத்திரமானால் வரவேற்கத்தக்கது. ஆனால் தற்போது போலியான அட்டோர்னித் தத்துவப் பத்திரங்கள் பரந்த அளவில் உலாவி வருகின் றன. அவற்றைத் தடுப்பது கஷ்டமாகவுள்ளது.


இலங்கையில் பல வழக்குகள் இது சம்பந்தமாக நடைபெறுகின்றன. மோசடி தடுப்புச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஒரு உறுதி எழுதப்படுவதற்கு உரிய நிபந் தனைகளை அட்டோர்னி தத்துவப்பத்திரத் திற்கும் கையாள வேண்டும் என சட்டம் விதித்து அதனை இறுக்கமாக கையாளப்பட்டால் ஓரளவு போலியான அட்டோர்னித்தத்துவப்பத்திரத்தைக் குறைக்கலாம்.

நீதிமன்றங்களும் பெரிதாக இவற்றைக் கவனிப்பதில்லை. அவை அட்டோர்னித் தத்து வப்பத்திரத்தின் கீழ் நடைபெறும் நடவடிக்கை களை மிகக் கவனமாகப் பார்க்க வேண்டும். எடுகோளை நம்பி யதார்த்தத்தை மறக்கக் கூடாது.

காணி / வீடு ஒன்றை வாங்கும் போது ஏமாறாமல் இருக்க கடைபிடிக்க வேண்டியவை ... காணி / வீடு  ஒன்றை வாங்கும் போது ஏமாறாமல் இருக்க கடைபிடிக்க வேண்டியவை ... Reviewed by Madawala News on 8/16/2017 12:23:00 PM Rating: 5