Ad Space avaiable

(CCTV இணைப்பு) ஒருவரை பலி எடுத்த தனியார் வங்கி கொள்ளையின் காட்சி.


இரத்மலானை, அத்திட்டியவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான சீ.சீ.டி.வி காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தால் குறித்த காணொளி இன்று வெளியிடப்பட்டது.

அத்திட்டியவில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, வங்கிக்கு சென்ற ஒருவரிடம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

குறித்த துப்பாக்கி சூட்டில் வங்கி பாதுகாவலர் ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்தார்.

இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்ட சீ.சீ.டி.வி காணொளியில், குறித்த கொள்ளையர்கள் வங்கியில் கொள்ளையடித்துச் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், சம்பவதுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய சீ.சீ.டி.வி. காணொளியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வெளியான வீடியோ ..
(CCTV இணைப்பு) ஒருவரை பலி எடுத்த தனியார் வங்கி கொள்ளையின் காட்சி. (CCTV இணைப்பு) ஒருவரை பலி எடுத்த தனியார் வங்கி கொள்ளையின்  காட்சி. Reviewed by Madawala News on 8/11/2017 11:33:00 PM Rating: 5