tg travels

பாடப்புத்தகங்களுடன் CD வழங்கபடும்.


(எம்.எம்.மின்ஹாஜ்)

 கல்வி துறைகளில் புரட்சி செய்யும் நோக்கில் 2019 ஆம் ஆண்டளவில் அனைத்து உயர்தர மாணவர்க ளுக்கு 'டெப்" கணினி வழங்கவுள்ள நிலையில் எதிர் வரும் காலங்களில் பாடப்புத்தகங்கள் வழங்கும் போது பாடவிதானங்களை உள்ளடக்கிய இறுவட்டும் வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி யவசம் தெரிவித்தார்.

இதன்படி 2019 ஆம் ஆண்டு டெப் கணினி வழங் கலின் முன்மாதிரி செயற்பாடாக குறிப்பிட்ட மாண வர்களுக்கு 'டெப்" கணினி வழங்கி பரீட்சித்து பார்க்கவுள்ளோம்.

மேலும் 41 இலட்சம் மாணவர்க ளுக்கு விரைவில் காப்புறுதி திட்டத்தை ஆரம்பிக்க வுள்ளோம்.

அதேபோன்று ஸ்மார்ட் வகுப்பறைக்கான புதிய அமைப்பிலான கதிரை மேசைகளையும் அறி முகம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார். அங்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் மேலும் குறிப்பிடுகையில்,

 கல்வித் துறையில் புரட்சி செய்யவுள்ளோம். இதன் படி 2019 ஆம் ஆண்டளவில் அனைத்து உயர்தர மாண வர்களுக்கும் 'டெப்' வழங்கவுள்ளோம். இதன்படி முதற்கட்ட பரீட்சார்த்த நடவடிக்கையாக குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மாத்திரம் வழங்கவுள்ளோம்.

இதன்படி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எதிர்கால கல்வி நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு இனிவரும் காலங்களில் பாடப்புத்தகங்களுடன் பாடவிதானங்களை உள்ளடக்கிய இறுவட்டுக ளையும் வழங்கவுள்ளோம் என்றார்.

பாடப்புத்தகங்களுடன் CD வழங்கபடும். பாடப்புத்தகங்களுடன் CD வழங்கபடும். Reviewed by Madawala News on 8/31/2017 03:06:00 PM Rating: 5