tg travels

ஒரு ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் போதும். ஏற்றம் பெற்று விடுவோம்.


இலங்கை கிரிக்கெட் அணியில் பிரச்சினை எதுவும் இல்லை என்று பொறுப்பு தலைவர் சாமர கபுகெதர தெரிவித்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணி, இலங் கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பல்லகெலேயில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 30 என்ற கணக்கில் தொடரை கைப் பற்றியது.

இரு அணிகள் இடையிலான   4வது ஒருநாள் போட்டி  கொழும்பில் வருகிற 31ம் திகதி நடக்கிறது. தோல்விக்கு பிறகு இலங்கை அணியின் பொறுப்பு தலைவர் கபுகெதர அளித்த பேட்டி யில் கூறியதாவது:

அணிக்கு வெளியில் இருந்து எந்த பிரச்சினை யும் இல்லை. வெற்றி சூட்சமத்தை நாங்கள் மறந்து விட்டோம் என்று நான் நினைக்கிறேன். பல அணிகளுக்கு இதுபோன்ற தோல்வி ஏற்பட்டு இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஒரு ஆட் டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் போதும். அதில் இருந்து ஏற்றம் பெற்று விடுவோம்.

கடந்த2 ஆட்டங்களில் எங்களது பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது・

 எங்களது துடுப்பாட்டவீரர்கள் தங்க ளது ஆட்ட தரத்தை உயர்த்த வேண்டும். நல்ல ஸ்கோரை குவித்தால் எங்களால் வெற்றி பெற முடியும். வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து அதனை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.

அப்படி செய்தால் வெற்றி பெற்று விடலாம். அணியில் சில பலவீனங்கள் இருக்கிறது. அதனை அடுத்த ஆட்டத்துக்கு முன்பாக கண்டுபிடித்து களைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார் கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னை பொறுத்தமட்டில் அணியில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஒரு அணியாக எங்களுக்குள் எந்தவித வேறுபாடும் கிடையாது. தற்போது ஒரே விஷயம் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி கான வேண்டும்.

உள் ளூரில் தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டி தொடரை இழந்து இருப்பது பெரிய பின்னடைவு தான். அணி தேர்வு விவாதம் குறித்துநான் அதிகம் சிந் திக்கவில்லை.

வருங்காலத்தில் நாங்கள் சிறந்த அணியாக உருவெடுப்போம்.

ஒரு ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் போதும். ஏற்றம் பெற்று விடுவோம். ஒரு ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் போதும். ஏற்றம் பெற்று விடுவோம். Reviewed by Madawala News on 8/30/2017 09:06:00 AM Rating: 5