Ad Space Available here

இது எனது கிரிக்கெட் வாழ்க்­கையில் அடைந்த மிக மோச­மான தொடர் தோல்வி.. சந்திமால் கவலை.


கிரிக்கெட் அரங்கில் மிக மோச­மான வரு­டத்தை எதிர்­நோக்கி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் மற்­றொரு அணித் தலைவர், தனது கிரிக்கெட் வாழ்க்­கையில் அடைந்த மிக மோச­மான தொடர் தோல்வி என குறிப்­பிட்­டுள்ளார்.

சம்­பியன்ஸ் கிண்­ணத்தைத் தொடர்ந்து ஸிம்­பாப்­வே­யிடம் சர்­வ­தேச ஒருநாள் தொடர் தோல்­வியை எதிர்­கொண்­ட­போது இது மோச­மான தோல்வி எனவும் இதற்­கான பொறுப்பை தான் ஏற்­ப­தா­கவும் தெரி­வித்து அணித் தலைவர் பத­வியை ஏஞ்­சலோ மெத்யூஸ் துறந்தார்.

தற்­போது இந்­தி­யா­வுக்கு எதி­ரான மூன்று போட்­டி­களைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை முழு­மை­யான (3 – 0 என வெள்­ளை­ய­டிப்பு செய்­யப்­பட்­டமை) தோல்வி அடைந்­ததை அடுத்து தனது கிரிக்கெட் வாழ்க்­கையில் சந்­தித்த மிக மோச­மான தொடர் தோல்வி என புதிய அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் தெரி­வித்­துள்ளார்.

காலியில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் 304 ஓட்­டங்­க­ளாலும் எஸ்.எஸ்.சி.யில் நடை­பெற்ற இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்­டங்­க­ளாலும் கண்டி, பல்­லே­க­லையில் நடை­பெற்ற கடைசி டெஸ்ட் போட்­டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்­டங்­க­ளாலும் இந்­தி­யா­விடம் இலங்கை தோல்வி அடைந்­தது.

இந்த மூன்று டெஸ்ட் போட்­டி­க­ளிலும் நான்கு இன்­னிங்ஸ்­களில் மாத்­தி­ரமே துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தியா 32 விக்­கெட்­களை மாத்­திரம் இழந்து 1949 ஓட்­டங்­களை மொத்­த­மாக பெற்­றது.

இலங்கை ஆறு இன்­னிங்ஸ்­களில் துடுப்­பெ­டுத்­தாடி 60 விக்­கெட்­களை இழந்து 1421 ஓட்­டங்­களை மொத்­த­மாக பெற்­றது. ‘‘எனது எட்டு வருட கிரிக்கெட் வாழ்க்­கையில் இதுதான் நான் எதிர்­கொண்ட மிகவும் கடு­மை­யான தொடர்’’ என்றார் தினேஷ் சந்­திமால்.

‘‘டெஸ்ட் போட்­டி­களை ஐந்து நாட்­க­ளுக்கு கொண்டு செல்­ல­மு­டி­யாமல் போன­மையே தோல்­விக்­கான காரணம். முதல் இரண்டு போட்­டிகள் நான்கு நாட்­களில் நிறை­வ­டைந்­தன. கடை­சி­யாக நடை­பெற்ற இந்த டெஸ்ட் மூன்று தினங்களில் முடிந்­து­விட்­டது. இந்த அணியில் நானும் ஓர் அங்­கத்­தினர் என்ற வகையில் இதுதான் நான் சந்­தித்த மிகவும் மோச­மான தொடர் தோல்வி’’ என சந்­திமால் குறிப்­பிட்டார்.

‘‘எமது சகல இர­சி­கர்­க­ளுக்கும் எமது ஏமாற்­றத்தை வெளிப்­ப­டுத்த விரும்­பு­கின்றேன்’’ என அவர் கூறினார்.

‘‘இலங்கை இர­சி­கர்கள் மற்றும் வெளி­நா­டு­க­ளி­லுள்ள இலங்கை இர­சி­கர்கள் அனை­வ­ருக்கும் நாங்கள் எந்­த­ளவு ஏமாற்றம் அடைந்­துள்ளோம் என்­பதை தெரி­யப்­ப­டுத்­து­கின்றேன்.

அணித் தலைவர் என்ற வகையில் இதற்­கான பொறுப்பை ஏற்­கின்றேன். இர­சி­கர்கள் எப்­போதும் எங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து வந்­துள்­ள­துடன் ஊக்­கு­வித்தும் வரு­கின்­றனர். எமது தோல்­வி­யிலும் அதனை நாங்கள் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. மக்கள் எங்­களை நோக்கி ஆர­வாரம் செய்­தனர். அதுதான் அணியின் தேவைப்­பா­டாகும்.

வீரர்­களை உள­ரீ­தி­யாக பாதிக்கச் செய்­யக்­கூ­டாது. நாங்கள் சரி­யான பாதையை நோக்கி நகர்­கின்றோம். உட­ன­டி­யாக எங்­களால் சிறந்த பெறு­பே­று­களை ஈட்ட முடி­யாமல் போகலாம். ஆனால் எதிர்­காலம் சிறப்­பாக அமையும் என நம்­பு­கின்றோம்’’ என்றார் தினேஷ் சந்­திமால்.

‘‘அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக ஒரு வரு­டத்­திற்கு முன்னர் நடை­பெற்ற டெஸ்ட் தொட­ரின்­போது எவரும் உபா­தைக்­குள்­ளா­க­வில்லை. எல்­லோரும் அதி­க­பட்ச பங்­க­ளிப்பை அணிக்கு வழங்­கினர். ஆனால் இந்­தி­யா­வுக்கு எதிரான தொட­ரின்­போது வீரர்கள் உபா­தைக­ளுக்கு உள்­ளா­னமை பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்தத் தொட­ரின்­போது பலர் உபா­தையால் ஒதுங்க நேரிட்­டது. நுவன் பிரதீப், சுரங்க லக்மால், ரங்­கன ஹேரத் ஆகியோர் உபாதை கார­ண­மாக ஓய்வு பெற நேரிட்­டது.

அவர்கள் அனை­வரும் கடந்த ஆறு மாதங்­க­ளாக திற­மையை வெளிப்­ப­டுத்­தினர். அவர்கள் உபா­தைக்­குள்­ளா­ன­மைதான் எமது தோல்­விக்கு பிர­தான கார­ண­மாக அமைந்­தது’’ என சந்­திமால் சுட்­டிக்­காட்­டினார். (என்.வீ.ஏ.)
இது எனது கிரிக்கெட் வாழ்க்­கையில் அடைந்த மிக மோச­மான தொடர் தோல்வி.. சந்திமால் கவலை. இது எனது கிரிக்கெட் வாழ்க்­கையில் அடைந்த மிக மோச­மான தொடர் தோல்வி.. சந்திமால் கவலை. Reviewed by Madawala News on 8/16/2017 09:16:00 AM Rating: 5