Kidny

Kidny

ஷிரந்தி நாளையும் யோசித நாளை மறுதினமும் CID யில் ஆஜராகின்றனர் ..


றகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் மகன் யோசித்த ராஜபக்ஷ ஆகியோருக்கு CID விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நாளை ஆஜரானார் என மஹிந்த அணி தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசீம் தாஜூதீனின் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இதற்கு முன்னரும் ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக வேறொரு தினத்தை வழங்குமாறு கோரியிருந்தார்.

இதனடிப்படையில் ஷிரந்தி ராஜபக்ஷ இன்றும் (14) யோஷித ராஜபக்ஷ நாளையும் (15) குற்ற விசாரணைகள் திணைக்களத்திற்கு முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை ஷிரந்தியும் நாளை மறுதினம் யோஷிதவும் சீ ஐ டியில் ஆஜரானார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தாஜுதீனின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் ஷிரந்தியின் பாதுகாவலர்களின் டிபெண்டர் வாகனங்களை பயன்படுத்தியமை தொடர்பில் ஷிராந்திக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.



ஷிரந்தி நாளையும் யோசித நாளை மறுதினமும் CID யில் ஆஜராகின்றனர் .. ஷிரந்தி நாளையும் யோசித நாளை மறுதினமும் CID யில் ஆஜராகின்றனர் .. Reviewed by Madawala News on 8/14/2017 03:28:00 PM Rating: 5