Kidny

Kidny

கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் சின்னக் கிண்ணியா அணிசம்பியன் .


(ஹஸ்பர் ஏ ஹலீம் )

கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் சின்னக் கிண்ணியா அணிசம்பியணானது

கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சமுதாயப் பொலிஸ் பிரிவினரால் நடாத்தப்பட்ட அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று போட்டி நேற்று(16) கிண்ணியா நடுஊற்று மைதானத்தில் இடம்பெற்றது.


 இப்போட்டியில் சின்னக்கிண்ணியா கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இப் போட்டிகள் யாவும் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 29 கிராமசேவகர் பிரிவில் ஒன்பது கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள ஒன்பது அணிகள் பங்கிபற்றின


இதில் இறுதிப்போட்டியில் இடிமன் மற்றும் சின்னக்கிண்ணியா அணிகள் ஒன்றையொன்று எதிர்த்தாடினர்.இறுதிப்போட்டியில் சின்னக்கிண்ணியா கிராமசேவகர் பிரிவு அணியினர் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. போட்டியில் வெற்றியீட்டிய அணிக்கு கேடயமும் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இப்போட்டியின் விசேட விருந்துனராக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ்,சிறப்பு விருந்துனராக மூதூர் பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியகட்சகர் திரு புத்திக மனதுங்க,உட்பட கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு விஜயசிரி,சீனக்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.எல்.ஐ.துஷாந்த,கிண்ணியா பொலிஸ் நிலைய சமூதாயப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமாகிய புரோஜன் பாலச்சந்திரன்என பலரும் பங்கேற்று கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் சின்னக் கிண்ணியா அணிசம்பியன் . கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் சின்னக் கிண்ணியா அணிசம்பியன் . Reviewed by Madawala News on 8/17/2017 09:18:00 AM Rating: 5