Ad Space avaiable

மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம். (மாடும் இறந்தது) #மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில்.


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக் குட்பட்ட பிள்ளையாரடியில் நள்ளிரவு (01) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது டன் மாடு ஒன்றும் பலியானது.

கல்குடா, கும் புறுமுலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள், வீதியில் நின்ற மாட்டுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த கும்புறு முலையை சேர்ந்த பி.நிசாந்தன்(28வயது)என்னும் இளைஞன் ஸ்தலத் தில் உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகமே குறித்த விபத் துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம். (மாடும் இறந்தது) #மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில். மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி இளைஞன் ஸ்தலத்திலேயே  உயிரிழந்த சம்பவம். (மாடும் இறந்தது) #மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில். Reviewed by Madawala News on 8/03/2017 11:12:00 AM Rating: 5