Kidny

Kidny

தலதா மாளிகையின் தங்கக் கூரையை அரசு புனரமைக்கும்... ஆசி பெற்ற பிரதமரின் கருத்து.


(மொஹொமட்  ஆஸிக்)
 பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவின்  அரசியல் வாழ்க்கைக்கு 40  வருடங்கள்  பூர்த்தியாவதை  முன்னிட்டு விஷேட  சமய வழிபாடுகள்  நேற்று   13 ம் திகதி கண்டி  ஶ்ரீ தலதா  மாளிகையில்  இடம் பெற்றது.

நேற்று   காலை  கலாநிதி  மைத்திரி  விக்கிரமசிங்கவுடன்  ஶ்ரீ தலதா  மாளிகைக்கு சமூகம்  தந்த  பிரதமர்  ரணில்  விக்கிரமசிங்க  அவர்கள்  புனித தந்தத்தை  வழிபட்டு  ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்.

அதன் பின்  தலதா  மாளிகையில்  இடம் பெற்ற  பல  சமய வழிபாடுகளிலும்  கலந்து கொண்டார்.

அதன்  பின்  தலதா  மாளிகையில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 40 தேரர்களுக்கான  பகல் தானம்  வழங்கும  நிகழ்வையும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.


இங்த  ஊடகங்களுக்கு  கருத்து   தெரிவித்த  பிரதமர்  ரணில்  விக்கிரமசிங்க, ரணசிங்க  பிரேமதாச  ஜனாதிபதியாக  இருக்கும் போது   தலதா   மாளிகைக்கு  அமைத்துக் கொடுக்கப்பட்ட  தங்கக்   கூறையை  திருத்தியமைக்கும்  நடவடிக்கயை  அரசு பொறுப்பேற்கும் என்று  கூறினார்.

இது தொடர்பில்  அஸ்கிரிய  மற்றும்  மல்வத்த  பீடங்களின் மஹா நாயக்க  தேர்ர்களுடன்  கலந்தாலோசிக்க உள்ளதாகவும்  பிரதமர் இங்கு  ஊடகங்களுக்கு கூறினார்.

ஆஸிக் -




தலதா மாளிகையின் தங்கக் கூரையை அரசு புனரமைக்கும்... ஆசி பெற்ற பிரதமரின் கருத்து. தலதா மாளிகையின்  தங்கக்   கூரையை அரசு புனரமைக்கும்... ஆசி பெற்ற பிரதமரின் கருத்து. Reviewed by Madawala News on 8/14/2017 08:50:00 AM Rating: 5