tg travels

ஜனாதிபதி மைத்திரிக்கி என்னைப்போன்று ஏசியவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவர் எனக்கு வேறுபாடு காட்டவில்லை.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு என்னைப்போன்று ஏசியவர்கள் யாரும் இருக்க முடியாது.  என்றாலும் கடைசியில் நான் அவரோடு ஒன்று சேர வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்படி நான் சேர்ந்தபோதும் கூட அவர் எனக்கு வேறுபாடு காட்டவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர நிகவெரட்டியவில் நடைப்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.

இன்று மஹிந்த ராஜபக்கூடிவின் பக்கத்திலிருந்து கோஷம் எழுப்புபவர் களைவிட அவரின் வெற்றிக்கு பாடுபட்டு மக்களுக்கு கொடுக்கவேண்டிய நிவாரணங்கள் எல்லாவற்றையும் கொடுத்தும் கூட கடந்த கால தேர்தல்களிலே வெற்றி பெற முடியவில்லை.

இந்த தோல்விற்கு காரணம் என்ன என்பதை யாரும் தேடிப்பார்க்கவில்லை. இந்த நாட்டில் முப்பது வருட காலமாக காணப்பட்ட கொடுர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர். ஒரேநாளில் ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கியவர்.

ஐயாயிரம்  ஊழியர்களுக்கு சகாய விலையில் மோட்டார் சைக்கிள்களை வழங்கியவர். என்றாலும் வடக்கில் உள்ள மக்களின் மனங்களை கவர முடி யவில்லை. அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப் பட்டாலும் மறுபுறத்திலே அரச ஊழியர்கள் மரங்களில் கட்டப்பட் டனர்.
முழங்காலிலே இருத்தினார்கள். இது பற்றி யாரும் தட்டிக்கேட்கவில்லை. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்,கடத்தப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர்.சிலர் இன்று வரை காணாமல் போயுள்ளனர். இவை யாவும் நிகழும் போது இவை யாவற்றையும் புறந்தள்ளி விட்டு வானத்தில் இருந்து வந்தவர்களை போல ஆட்சி செய்ய முற்பட் டனர்.

இவைதான் எங்கள் தோல் விற்கு காரணமாகும். மஹிந்த ராஜபக்கூடிவை தோளிலே போட்டு ஒடுவதற்கு முயற்சிக்கின்றவர்கள் பத்து ப்பதினைந்து வாகனங்களில் பயணித்தவர் கள் நான்கு ஐந்து செயலாளர்களை வைத்துக்கொண்டு இருந்தவர்கள் மக்கள் பக்கம் இருக்கவில்லை.

இன்று கட்சியை நல்ல முறையிலே வழி நடத்திச்செல்லுகின்றோம். எதிர்க்காலத்தில் மஹிந்த ராஜபக்கூடி பிரதமராகி அந்த அரசிலே ஒரு அமைச்சராக இருப்பதற்கு ஆசைப் பட்டாலும் அது நடைமுறை சாத்தி யமற்றதொன்றாகும்.

 ஏனென்றால் இந்த அரசை நாம் 2020 வரை கொண்டு செல்வோம். இதற்காக வேண்டி கட்சி ஆதரவாளர்கள் அரசிற்கு உதவ வேண்டும் என்றார்.

ஜனாதிபதி மைத்திரிக்கி என்னைப்போன்று ஏசியவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவர் எனக்கு வேறுபாடு காட்டவில்லை. ஜனாதிபதி மைத்திரிக்கி என்னைப்போன்று ஏசியவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவர் எனக்கு வேறுபாடு காட்டவில்லை. Reviewed by Madawala News on 8/12/2017 03:19:00 PM Rating: 5