Ad Space avaiable

அப்துல்லாஹ்வின் ஆசையை நிறைவேற்றிய துபாய் பொலிஸ்..


- ரஸானா மனாப்-
அலி அல் அப்துல்லாஹ் ஐக்கிய அரபு எமிரேட்சின் ராஸ் அல் கைமாவை சேர்ந்த எட்டு வயது சிறுவன், தனது தந்தையிடம் ஒருநாள் கேட்டிருக்கிறான் என்னிடம் எல்லா வகையான ஆடைகளும் இருக்கின்றது ஆனால் டுபாய் பொலிசாரின் ஆடைகள் இல்லை அது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என.

அவனது தந்தை ஈசா அலி அல் பலூச்சி  அவனின் வேண்டுகோளை வீடியோவாக பதிவு செய்து டிவிட்டரில் பதிவேற்றம் பண்ணிவிட்டார், திடிரென அலி அப்துல்லாஹ்விற்கு டுபாய் பொலிஸ் ஜெனரல் ஹெட் குவாட்டர்சில் இருந்து  ஒரு அழைப்பு வந்தது.

 தையல்காரர் ஒருவரிடம் சென்று அவனது ஆடைக்கான அளவை கொடுக்கும்படி, பிறகு அந்த சிறுவனை ஜெனரல் ஹெட் குவார்ட்டசிற்கு வருமாறு அழைத்து மேஜர் ஜெனரல் அப்துல்லாஹ் கலீபா அல் மெரி டுபாய் பொலிசாரின் உத்தியோக பூர்வ மினி ஆடையை அவனுக்கு அன்பளிப்பு செய்திருக்கிறார்.

பெர்ஸ்ட் லெப்டினன்ட்க்குரிய அந்த ஆடையை பெற்ற அப்துல்லா மிகவும் மகிழ்ந்து போனான் அவனால் நம்பவே முடியவில்லை.

 அப்துல்லாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு மேஜர் ஜெனரல் அல் மெரி எங்களை கட்டளையிட்டார். நாங்கள் அவரை தொடர்பு கொண்டோம், அவரது அளவீடுகளை எடுத்து, அவருக்கு உத்தியோகபூர்வ சீருடையை தயார் செய்து அவருக்கு முதல் லெப்டினன்ட் ரேங்க் கொடுத்தோம் சமூகத்தில்  மகிழ்ச்சியை பரப்பவும் குறிப்பாக குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்துவது பொலிஸ் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக காணப்படுகின்றது என்று சமூக ஊடக வலைத்தளத்தின் இயக்குனரான அம்னா அல் பன்னா தெரிவித்திருக்கிறார்.


 
அப்துல்லாஹ்வின் ஆசையை நிறைவேற்றிய துபாய் பொலிஸ்.. அப்துல்லாஹ்வின் ஆசையை நிறைவேற்றிய துபாய் பொலிஸ்.. Reviewed by Madawala News on 8/01/2017 07:15:00 AM Rating: 5