Ad Space avaiable

இலங்கை அணி அடைந்துள்ள இந்த பின்ன்னடைவுக்கு பேஸ்புக் தான் காரணம்..


இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் பலர் பின்னடைவை சந்திப்பதற்கு 'முகப்புத்தகம் (பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பாவனையே காரணமாக அமைந்துள்ளதாக முன்னாள் அணித் தலைவரான திலகரட்ன தில்ஷான் தெரிவித்துள்ளார்.

 தனியார் சிங்கள வானொலி நிகழ்ச்சியொன் றில் கலந்துகொண்டிருந்த அவர் தற்போதைய இலங்கை அணியின் பின்னடைவு தொடர்பாக
கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித் துள்ளார்.

அவர் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளதாவாது,

 இன்று வீரர்களுக்கிடையே காணப்படும் பிரதான பிரச்சினைகளாக மொபைல்போன் , பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள பாவனைகள் உள்ளன. பயிற்சிகள் முடிவடைந்த உடனேயே புகைப்படங்களை எடுத்து பல வீரர்கள் அவற்றை பதிவேற்றம் செய்வதை அவதானித்துள்ளேன்.

முன்னர் நாங்கள் விளையாடும் காலத்தில் சுற்றுப் போட்டியொன்றுக்கு சென்றால் உண வருந்தி ஒரே இடத்திலேயே இருப்போம். அப்போது போட்டிகள் தொடர்பாக மட்டுமே கதைப்போம்.

ஆனால் இப்போது ஒவ்வொ ருவரும் மொபைல் போன்களை எடுத்துக் கொண்டு வேறு வேறு வேலைகளையே செய்கின்றனர். .

நாட்டுக்காக விளையாடும்போது தமக்கென
பெரிய பொறுப்புகள் உள்ளன. அதனை மறக் கக் கூடாது.

எனது மகன் பிறந்த போதும் நான் இரண்டு மாதங்கள் சுற்றுப்போட்டிகளிலேயே இருந்தேன்.ஆனால் அப்போது இடையில் நான் வந்து போயிருக்கலாம். ஆனால், நாடு என்னி டம்பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தது.

நாம் நன்றாக விளையாடினால் தான் மற்றைய வர்கள் எங்களை பற்றி பேஸ்புக்குகளில் புகழ் வார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது
எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி அடைந்துள்ள இந்த பின்ன்னடைவுக்கு பேஸ்புக் தான் காரணம்.. இலங்கை அணி அடைந்துள்ள இந்த பின்ன்னடைவுக்கு பேஸ்புக் தான் காரணம்.. Reviewed by Madawala News on 8/04/2017 12:01:00 PM Rating: 5