Ad Space Available here

உள்ளூராட்சிசபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே இடம்பெறும். ( 60 வீதம் தொகுதி - 40 வீதம் விகிதாசாரம்.


உள்ளூராட்சிசபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே இடம்பெறும். அது எப்போது இடம்பெறும் என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

இந்த விடயத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதும் எனது பொறுப்பை நான் நிறைவேற்றி விட்டேன். இனி பாராளுமன்றமே அது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் கூடி குறித்த சட்டமூலம் தொடர் சட்டமூலம் தொடர் பில் விவாதம் நடத்தும் தினத்தை தீர்மானிப்பர்.

சபையில் அந்த சட்டமூலம்  நிறைவேற்றப்பட்டதும் தேர்தலுக் கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீல.சு.கட்சி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடொன்று நேற்று கட்சியின் தலைமையகத்தில் இடம் பெற்றது.

 இதன்போது உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்ந்தும் காலம் கடத்தப் படுவது தொடர்பில் ஊடகவியலாளர் பலரும் அமைச்சரிடம் கேள்வி எழுப் பினர். இந்த விவகாரம் மேற்படி மாநாட்டில் ஒரு சர்ச்சையாகியது. எவ்வாறெனினும் எல்லை மீள்நிர்ணய விவகாரம்போல் அல்லாமல் உள்ளூராட்சி சபை தேர்தல் விடயத்தில் நாம் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றோம்.


இது தொடர்பில் எனக்கு இருந்த பொறுப்பை நான் நிறைவேற்றி விட்டேன். இனியும் இது தொடர்பில் என் மீது யாரும் குற்றம்சாட்ட முடியாது. பாராளுமன் றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப் பினர்களதும் தீர்மானத்துடனேயே இதற்கான முடிவு இனி எட்டப்படும். உள்ளூராட்சிசபை தேர்தல் 100க்கு 70 வீதம் தொகுதி வாரியாகவும் 100க்கு 30 வீதம் விகிதாசார ரீதியாகவும் நடத் துவதாகவே ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுள்ளது.

எனினும் சிறுபான்மை கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க இதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு 100 க்கு 60 வீதம் தொகுதிவாரியாகவும் 100க்கு 40 வீதம் விகிதாசார ரீதியாக வும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டமூலத்தை பாரா ளுமன்றத்தில் சமர்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தல் இந் தளவு காலம் தாழ்த்தப்படுவதற்கு எந்தவகையிலும் நான் பொறுப்பாளி அல்ல கடந்த அரசாங்கத்தில் அப்போ தைய அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் விருப்பத்திற்கு இணங்க அமைச்சர் அதாவுல்லா தன்னிச்சையான முடி வுகளை எடுக்க நேர்ந்தது. இதுவே தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதற்கு காரணமானது. குறித்த சட்டமூ லத்தில் எல்லை நிர்ணயம் தொடர் lar, குறிப்பிடப்பட்டுள்ளதால் அதற்கிணங்கவே செயற்பட வேண் டியுள்ளது.


எல்லை மீள்நிர்ணய அறிக்கையை நான் 2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடம் கையளித்தேன். இது வர்த்த மானியில் வெளியிடப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகளின் பெரும் விமர்ச னத்திற்கு உள்ளாகியது. இதற்கிணங்க எந்த ஒரு கட்சியும் நான் மேன்முறையீடு செய்தமை தொடர்பில் என் மீது குற்றம்சாட்டவில்லை.


எல்லோருமே குறித்த எல்லை நிர்ணய அறிக்கைக்கு இணங்க தேர்தல் நடத்தப்படக்கூ டாது என்றே தெரிவித்தனர். நான் மக் களின் கருத்துக்களுக்கு செவிமடுத்து மேன்முறையீடு வரை சென்றேன் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை உள்ளூராட்சி சபை தேர்தல் விரைவில் நடத்தப்படவேண் டும் என்பதில் தாமும் உறுதியாகவுள் ளதாகவும் அது கலப்பு முறையில் அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


பெண்களுக்கு 25 வீத ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் உள்ளூராட்சி சபை தேர்தலில் 25 வீத ஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்காது போனால் அதற்கு எதிராக செயற்படப்போவதாக இராஜாங்க அமைச் சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.


உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப் பட்டுள்ள நிலையில் அதில் பெண் களுக்கு 25 வீத ஒதுக்கீடு தவிர்க் கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இச் சட்டமூலத்தை அதேவிதத்தில் பாரா ளுமன்றத்தில் சமர்பித்தால் அதற்கு எதிராகவே தாம் வாக்களிக்கப்போவ தாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிணங்க 25 வீதமாக உள்ள பெண்களுக்கு ஒதுக்கீடு 16 வீதமாக மாறக்கூடும் எனத் தெரிவித்த அவர், இதனை ஏற்கமுடியாது என்றும் தெரி வித்தார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண் டிருந்த உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா சுதர் ஷனி பெர்னண்டோ புள்ளேவின் கருத்தை ஏற்றுக் கொள்வதாகவும் பேச்சுவார்த்தை மூலம் இதனை நிவர்த்திக்க முடியுமென்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சிசபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே இடம்பெறும். ( 60 வீதம் தொகுதி - 40 வீதம் விகிதாசாரம். உள்ளூராட்சிசபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே இடம்பெறும். ( 60 வீதம் தொகுதி - 40 வீதம் விகிதாசாரம். Reviewed by Madawala News on 8/04/2017 08:34:00 AM Rating: 5