Kidny

Kidny

"அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது" ஏறாவூரில் முஸ்லிம் கலாச்சாரத்தை சூறையாட உள்ள சுற்றுலாதுறை மையம்?


ஏரூர் பொருளாதாரத்துக்கான கதை இல்லை ஏரூர் எதிர்காலத்திற்கான கதை .

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களை அறிந்துகொள்ளும் வகையிலும் அவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த மையம் அமைக்கப்படவுள்ளது.

இந்த மையத்தின் மூலம் சுற்றுலாத்துறை ஊடாக கிராமிய பொருளாதாரத்தினையும் வளர்க்கும் வகையில் செயற்படவுள்ளதாகவும் அறிய கிடைக்கிறது .

ஊர் வளர்ச்சி என்ற நோக்கில் சரியானதாக காணப்படும் சில சகோதரர்களுக்கு .ஆனால் எதிர்காலத்தில் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது .

 இவ்வாறான மையம் ஒன்று கெளரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களால் மட்டக்களப்பு திறந்து வைக்கப்பட்டது படித்த ஞாபகம்.  ஏற்கனவே சுற்றுலாதுறை பிரபலம் ஆகிய இடங்களில் திறந்தது வைக்க பட்டுள்ளது.

 ஆனால் ஏறாவூரில் இன்னும் காலடி எடுத்து வைக்கவில்லை சுற்றுலாதுறை அது நடந்தால் நமது முஸ்லிம் கலாச்சாரத்தை சூறையாடி விடும் என்பது அப்பட்டமான உண்மை.

ஆற்றங்கரையில் குளிக்க வாய்ப்பு இல்லை என்று கூறுவது பிழையான கருத்து ஏனெனில் தற்போது முடியாத போனாலும் எதிர்காலத்தில் சாத்தியமாகலம் .குப்பை மேடு சுற்றுலாதுறை மையமாக மாறும் போது அது நடக்காதா ???.  அரசியல் மாற்றம் நடைபெறும் இது நியதி அப்போது அதை மாற்றுவோம் என்றால் எல்லாம் முடிந்தது .

சமுக சீர்கேடுகளுக்கு வழி அமைப்பதற்கு இடம் கொடுத்ததற்கு்  தூரநோக்கோடு சிந்திக்க வில்லையா நமது ஏறாவூர் உலமா சபை ??.

நீங்கள் சுற்றுலாதுறை மையம் கட்டுவது பிழை என்று சொல்லவில்லை கட்ட இருக்கின்ற இடத்தால் நடக்கும் விபரீதங்களை சிந்தியுங்கள். ஏதிர்கால
இளைஞர்களை மற்றும் கலாச்சாரத்தை கருத்தில் கொள்ளுங்கள்
தொடரும். ..

தகவல் = ஏரூர் இஹ்கான் , ஸ்ரீ ஜெயவர்த்தனே பல்கலைக்கழகம்
"அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது" ஏறாவூரில் முஸ்லிம் கலாச்சாரத்தை சூறையாட உள்ள சுற்றுலாதுறை மையம்? "அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது" ஏறாவூரில் முஸ்லிம் கலாச்சாரத்தை சூறையாட உள்ள சுற்றுலாதுறை மையம்? Reviewed by Madawala News on 8/19/2017 09:30:00 AM Rating: 5