tg travels

உயிரோடு புதைக்கப்பட்ட பலூஜா !


-Muja ashraff -

அமெரிக்க இராணுவத்தால் உயிருடன் பிடித்துச் செல்லப்பட்ட மக்கள் (1300-1500 பேர்) அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர்.  இதையே வேறு சொற்களில், “ஆயுதப் போராளிகள்” 1400 பேர் கொல்லப்பட்டனர் என்ற தனது அறிவிப்பின் மூலம் வெளிப்படுத்தியது அமெரிக்கா.

ஃபலூஜா மக்களைப் பழிவாங்கும் தனது நோக்கத்தை இந்த செயலின் மூலம் வெளிப்படுத்திக்கொண்டது. படுகாயமுற்றுப் பரிதாப நிலையில் இருந்த ஒரு ஈராக்கியரை அமெரிக்க சிப்பாய் ஒருவன் சுட்டுக் கொல்வதைப் NBC செய்தி படம் பிடித்திருந்தது. தனது பாதுகாப்பு கருதி செய்யப்பட்டதே இந்த செயல் என அமெரிக்க இராணுவ விசாரணை பின்னாளில் கண்டறிந்து கூறியது. சுய மரியாதையும், சுதந்திர வேட்கையும் கொண்ட மனிதன் உயிருடன் இருக்கும் வரை தனக்குப் பாதுகாப்பில்லை என்பதைச் சொல்ல ஒரு விசாரணை எதற்கு?

பத்து நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் 51 அமெரிக்க சிப்பாய்கள் இறந்தனர்.  நகரத்து மக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.  இத் தாக்குதலுக்கு முன்னதாக பல பத்தாயிரம் மக்கள், பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் நகரத்தை விட்டு வெளியேறினர். இந்த தாக்குதலுக்கு முந்திய ஃபலூஜாவின் மக்கள் தொகை 4 ¼ –  6 லட்சம்.  தற்போதைய ஜனத்தொகையோ வெறும் 2 ½  –  3 லட்சம் மட்டுமே இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இத் தாக்குதலில் நகரத்தின் கட்டிடங்கள் பாதிக்கு மேல் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன.  ஈராக்கின் பல பகுதிகளைப் போலவே ஃபலூஜாவும் இடிபாடுகளுக்கு இடையேதான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.  கழிவு நீர் வெளியேற்ற வழிகள் செயல்படவில்லை, குப்பைகள் தெருக்களில் மலையாய்க் குவிகின்றன.  குடிநீர் வினியோகம் மாசுபட்டு இருக்கிறது.  டி.பி., டைஃபாய்ட், கழிச்சல் நோய்களுக்கு ஏராளமான மக்கள் ஆளாகின்றனர்.

தாக்குதல் முடிந்து இன்று வரை இதுதான் நிலை. இதுவும் ஒரு தாக்குதல் தானே.  இந்த நிலைமையை மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அனுவலகத்தின் IRIN –ன் சமீபத்திய ஆய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது.
உயிரோடு புதைக்கப்பட்ட பலூஜா ! உயிரோடு புதைக்கப்பட்ட பலூஜா ! Reviewed by Madawala News on 8/04/2017 04:09:00 PM Rating: 5