Kidny

Kidny

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற தீ விபத்து தொடர்பில் இருவர் கைது.


நிட்டம்புவ - கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட தீ பரவலை தொடர்ந்து அங்கு தீப் பற்றி எரிந்த பவுஸரின் சாரதி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கம்பஹா காவற்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் கவனக்குறைவுடன் செயற்பட்ட காரணத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற் கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கொழும்பு - கண்டி வீதியின் நிட்டம்புவ கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

எவ்வாறாயினும் , சுமார் 2 மணி நேர போராட்டத்தின் பின்னர் தீப்பரவல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது.

தீயினால் , உயிர்ச் சேதங்கள் எதுவும் பதிவாகாத நிலையில் , எரிபொருள் நிரப்பு நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

எனினும் சேத விபரங்கள் குறித்து இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற தீ விபத்து தொடர்பில் இருவர் கைது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற  தீ விபத்து தொடர்பில் இருவர் கைது. Reviewed by Madawala News on 8/26/2017 09:09:00 AM Rating: 5