tg travels

பல்கலைக்கழக மாணவியின் புகைப்படத்தை பயன்படுத்தி மற்றுமொரு பெண் செய்த நிதி மோசடி அம்பலம்.



பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 21 வயது மாணவி நோய்வாய்ப்பட்டி ருப்பதாக விளம்பரம் செய்து நிதி சேகரித்து வந்த பெண் ஒருவருக்கு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் லங்கா ஜயரத்ன 2 வருட கடுழிய சிறைத்தண்டனை வழங்கித்தீர்ப்பளித்துள்ளார்.

அது பத்து வருடங் களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண் டனையாகும்.

குறித்த காலப் பகுதியில் இவ்வாறான தவறை மீண்டும் செய்தால் அத்தவறுக் கான தண்டனையும் இந்தத்தண்டனையும் சேர்த்து வழங்கப்படும் என்று தெரிவித்த மாஜிஸ்திரேட், மீண்டும் அவ்வாறான குற்றத்தை செய்ய வேண்டாமென எச்சரிக்கை விடுத்தார்.

அப்பெண்ணுக்கு ஒரு குற்றத்துக்கு 1500 ரூபா வீதம் 4500 ரூபா
அபராதம் செலுத்துமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

 இவ்வாறான தண்டனை யமுனா கோஜீனகார என்னும் பெண் ணுக்கே வழங்கப்பட்டது. அப்பெண்ணுக்கு விளம்பரம் செய்த மாணவியின் வயதையொத்த புதல்வியொருவரும் உள்ளதாகவும் அவ்வாறான ஒருவர் இந்த தவறை செய்தது மிகவும் மோசமான செயல் எனவும் மாஜிஸ்திரேட் கூறினார்.

இவ்வாறாக திரட்டிய 30500 ரூபா பணத்தை அம்மாணவிக்கு வழங்க சந்தேக நபர் விருப்பம் தெரிவித்தார்.

நோயில்லாத அம் மாணவி இவ்விளம்பரம் மூலம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அம்மாணவியின் தந்தை முறையிட்டதற்கமைய மோசடி விசாரணைப் பிரிவு இது தொடர்பில் விசாரணை நடத்தியது.


பல்கலைக்கழக மாணவியின் புகைப்படத்தை பயன்படுத்தி மற்றுமொரு பெண் செய்த நிதி மோசடி அம்பலம். பல்கலைக்கழக மாணவியின் புகைப்படத்தை பயன்படுத்தி மற்றுமொரு பெண் செய்த நிதி மோசடி அம்பலம். Reviewed by Madawala News on 8/02/2017 01:54:00 PM Rating: 5