Ad Space avaiable

80 உலக நாடுகளுக்கு கட்டாரில் நுழைய free visa முறை அமுல். இலங்கை, சவூதி, uae உள்வாங்கப்படவில்லை.


சவூதி கூட்டனியின் தடைகளை அடுத்து மத்திய கிழக்கில் கட்டார் நாடு தனித்து விடப்பட்ட நிலைக்கு வந்தது அறிந்ததே. 


இந்நிலையில், 80 உலக நாடுகளுக்கு கட்டாரில் நுழைய free visa முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.


சுற்றுலா துறையையும், எதிர்வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்துக்கு வரும் ரசிகர்களையும் கருத்தில் கொண்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


33 நாடுகளுக்கு 180 நாள் விசாவும், 47 நாடுகளுக்கு 30 நாள் முறையிலும் இம்முறை அறிமுகப்படுத்தப்படும்.


குறிப்பிட்ட free visa திட்டத்தில் இலங்கை, சவூதி, குவைட், uae போன்ற நாடுகள் உள்வாங்கப்படவில்லை. ( இந்தியா 30 நாள் free visa)


அதேவேளை கட்டார் ஏர்வேஸ் 62 புதிய இடங்களுக்கும் தனது சேவையை தொடங்க உள்ளது.


2.4 மில்லியன் மக்களை கொண்ட கட்டார் நாட்டின் முக்கால்வாசிக்கி அதிகமானோர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Free Visa நாடுகளின் விபரம் கீழே


80 உலக நாடுகளுக்கு கட்டாரில் நுழைய free visa முறை அமுல். இலங்கை, சவூதி, uae உள்வாங்கப்படவில்லை. 80 உலக நாடுகளுக்கு கட்டாரில் நுழைய free visa முறை அமுல். இலங்கை, சவூதி, uae உள்வாங்கப்படவில்லை. Reviewed by Madawala News on 8/09/2017 06:57:00 PM Rating: 5