Kidny

Kidny

சுமார் 17 ஆயிரம் கருக்கலைப்பு மாத்திரைகள் சிக்கின. கிரீன் செனல் வழியூடாக செல்ல முயன்றவர் சிக்கினார்.


சுமார் 2.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான 16,930 கருக்கலைப்பு மாத்திரைகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து நாட்டுக்கு வந்த இந்தியப் பிரஜையிடமிருந்தே, மேற்படி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

விமான நிலையத்தில், கிரீன் செனல் வழியூடாக, வெளியேறுவதற்கு முயன்ற அவரை, சந்தேகம் கொண்ட அதிகாரிகள், சோதனைக்கு உட்படுத்திய போதே, அவரிடமிருந்து மேற்படி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

கொழும்பு, கோட்டை மற்றும் மருதானையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தனியார் மருந்தகங்கள் ஊடாக, அதிகூடிய விலையில் விற்பனை செய்துவிட்டு, நாட்டிலிருந்து மிகவிரைவாக வெளியேறிவிடுவதற்கு, சந்தேகநபர் திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாத்திரைகள் யாவும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
சுமார் 17 ஆயிரம் கருக்கலைப்பு மாத்திரைகள் சிக்கின. கிரீன் செனல் வழியூடாக செல்ல முயன்றவர் சிக்கினார். சுமார் 17 ஆயிரம் கருக்கலைப்பு மாத்திரைகள் சிக்கின. கிரீன் செனல் வழியூடாக செல்ல முயன்றவர் சிக்கினார். Reviewed by Madawala News on 8/31/2017 08:35:00 AM Rating: 5