Kidny

Kidny

கட்டுநாயக்க விமான நிலையத்தில், அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் கைங்கரியம் .


விரோதமான முறையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வௌியே விடுவிப்பதற்கு முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரே சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 09.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து குறித்த தங்க ஆபரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அவற்றை சூட்சுமமான முறையில் விமான நிலையத்தில் இருந்து வௌியே அனுப்ப புலனாய்வுப் பிரிவு அதிகாரி முயற்சித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதன்பின்னர் சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் 9.1 மில்லியன் ரூபா பெறுமதியானது என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில்ஜயரத்ன கூறினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில், அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் கைங்கரியம் . கட்டுநாயக்க விமான நிலையத்தில், அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் கைங்கரியம் . Reviewed by Madawala News on 8/18/2017 10:42:00 AM Rating: 5