tg travels

கம்பளையில் முஸ்லிம் பாடசாலை மாணவிகளுக்கு பர்தாவை கழற்ற பணிக்கப்பட்ட சம்பவம் ...

 
-கம்பளை நிருபர்-
கம்பளையில் முஸ்லிம் பாடசாலை மாணவிகளுக்கு பர்தாவை கழற்றி விட்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுமாறு பணிக்கப்பட்டமை பற்றி கல்வி இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார். 

கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட கஹட்டபிடிய முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் கம்பளை நகரில் இயங்கும் சர்வதேச பாடசாலையொன்றின் மாணவிகள் நேற்று செவ்வாக்கிழமை பரீட்சைக்குத் தோற்றுவதற்குச் சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 கம்பளை கங்கசிறிபுர வித்தியாலயம் மற்றும்; சென் ஜோசப் கல்லூரி என்பவற்றில் அமைந்துள்ள பரீட்சை நிலையங்களில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார். 
இதில் கங்கசிறிபுர வித்தியாலயத்தில் மாணவிகள் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும்; போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தவும் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பர்தாவை கழற்றி விட்டு பரீட்சை எழுதுமாறும் பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் தொடர்பாக கம்பளை கல்விப்பணிப்பாளர் ஆனந்த பிரேமசிறி மற்றும் பரீட்சைகள் திணைக்களம் என்பற்றுக்கும் முறைப்பாடு செதுள்ள பெற்றோர் கம்பளை பொலிஸ் நிலையத்திலும் இன்று காலை முறைப்பாடொன்றை செதுள்ளனர். 
இச்சம்பவத்தினால் தமது பிள்ளைகள் அச்சத்துடன் பரீட்சை நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் பரீட்சைக் காலத்தில் மாணவிகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.  


இது தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் மேலும் தெரிவிக்கையில், 

இது பற்றி கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்னணின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன். இது பற்றி அமைச்சர் உரிய நடவடிக்ககைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். 

எனவே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் என்னிடம் தெரிவித்தார். 

எனவே மாணவிகள் அச்சமின்றி தொடர்ந்து தமது பாடசாலை சீருடையுடன் பரீட்சைக்குத் தோற்ற முடியும். 
கம்பளையில் இதற்கு முன்பும் இது போன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பர்தாவை தமது சீருடையில் ஒரு அங்கமாகக் கொண்டுள்ளனர். இந்த உடையை அரசாங்கமும் அங்கீகரித்தள்ளது. எனவே இந்த உடையை கழற்றுமாறு எவருக்கும் பணிப்புரை வழங்க முடியாது. 

ஆனால் முஸ்லிம் மாணவிகள் முகத்தை திரையிட்டு மறைத்து பரீட்சைக்குத் தோற்ற முடியாது. இதனால் பரீட்சை நிலையத்தில் அதிகாரிகள் தமது கடமையை சரியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.  

கம்பளையில் முஸ்லிம் பாடசாலை மாணவிகளுக்கு பர்தாவை கழற்ற பணிக்கப்பட்ட சம்பவம் ... கம்பளையில் முஸ்லிம் பாடசாலை மாணவிகளுக்கு பர்தாவை கழற்ற பணிக்கப்பட்ட சம்பவம் ... Reviewed by Madawala News on 8/10/2017 01:06:00 PM Rating: 5