Kidny

Kidny

மத்திய மாகாணத்தில் திட்டமிடப்பட்டு பழிவாங்கப்பட்ட முஸ்லிம் பட்டதாரிகள்.


மத்திய மாகாண ஆசிரியர் நிய மனத்தின்போது முஸ்லிம் பட்டதாரிகள் திட்டமிடப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர் என முஸ்லிம்
விவகாரம், தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.


கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது அமைச்சர் ஹலீம் குறித்த பழிவாங்கள் குறித்து ஜனாதி பதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

அவர் மேலும், மத்திய மாகாணத்திலுள்ள பட்டதாரிகளி டமிருந்து ஆசிரியர் நியமனத்திற்காக விண் ணப்பங்கள் கோரப்பட்டனர்.

இதன்போது தமிழ் மொழி மூலம் 742 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இதில் 421 தமிழ் பட்டதாரிகளும் 32 முஸ்லிம் பட்ட தாரிகளும் உள்வாங்கப்பட்டனர்.

 தமிழ் பாடசாலைகளுக்கு கஷ்டப்பிர தேசம் மற்றும் தோட்டப்பாடசாலைகள் எனும் அடிப்படையில் அவ்வப்போது நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால் பாரியளவில் ஆசிரியர் வெற்றிடம் காணப் படும் முஸ்லிம்பாடசாலைகளுக்கு வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை,


இந்நிலையில், 42 தமிழ் ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லிம் பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்படவில்லை.

முஸ்லிம் பாடசாலைகளில் அதிகமான வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் 151 முஸ்லிம் பட் டதாரிகள் பழிவாங்களின் அடிப்படையில் தமிழ் பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது பாரபட்சமாகும். அத் தோடு திட்டமிடப்பட்ட பழிவாங்களாகும்.

முஸ்லிம் பட்டதாரிகள் மிக நீண்ட தாரம் பிரயாம் செய்து பணிக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர். மூன்று அல்லது நான்கு பஸ்களில் மாறிச் செல்லவேண்டியுள்ளது.

அத்துடன் பிரயானத்திற்கு மட்டும் ஆறு மணித்தியாலங்க ளுக்கு மேலாக நேரத்தை செலவிடவேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது பெரும் அநியாயமாகும்.


இதுகுறித்து நானும், மத்திய மாகண சபை உறுப்பினர்களான ஜே.ஜெய்னுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்). எம்.ரி.எம். முத்தலிப். ஹிதாயத் சத்தார் உள்ளிட்டோர் மத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வித் திணைக்கள பணிப்பாளர் உள்ளிடோரின் கவனத்திற்கு கொண்டுவந்தோம் .

பாதிக்கப் பட்ட பட்டதாரிகளை மேன்முறையீடு செய் யுமாறு அவர்கள் வேண்டிக்கொண்டனர்.

இதற்கமைய ஓரிரு பட்டதாரிகளுக்கு இட மாற்றம் வழங்கப்பட்டாலும் அது திருப்திகரமானதாக இல்லை என அமைச்சர் ஹலீம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.


இதன்போது குறித்த விடயங்களை எழுத்து மூலமாக தருமாறு ஜனாதிபதி அமைச்சர் ஹலீமிடம் தெரிவித்தார். இதற்கமைய நேற்றுமுன்தினம் தினம் அமைச்சர் ஹலீம் மத்திய மாகண முஸ்லிம் பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஜனாதிபதிக்கு எழுத்து மூல அறிக்கையொன்றை சமர்பித்தார்.

மத்திய மாகாணத்தில் திட்டமிடப்பட்டு பழிவாங்கப்பட்ட முஸ்லிம் பட்டதாரிகள். மத்திய மாகாணத்தில் திட்டமிடப்பட்டு பழிவாங்கப்பட்ட முஸ்லிம் பட்டதாரிகள். Reviewed by Madawala News on 8/25/2017 02:49:00 PM Rating: 5