Kidny

Kidny

பெண்கள் ஆண் போல் மாறுவேடம் பூண்டு கொள்ளை, 3 யுவதி உட்பட ஒரு பிக்குவும் கைது !

பெண்கள்  ஆண் போல் மாறுவேடம் பூண்டு  முன்னாள் பிக்கு ஒருவருடன் சேர்ந்து நடத்திய கொள்ளைச் சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது.


எஹலியகொடை அவிசாவளை பகுதிகளில் குறிப்பாக புவக்பிட்டிய பகுதியில் நீண்ட நாட் களாக இரவு வேளைகளில் வீடுகளில் புகுந்து பெறுமதியான இலத்திரனியல் , மின்சார பொ ருட்கள் ஆபரணங் களை திருடும் கைங்கரியத்தில் ஈடு பட்டுள்ளனர்.

பொலீசாரிடம் வகையாக மாட்டிக் கொண்ட இவர்கள் புவக்பிட்டிய ,
சேர்ந்தவர்களெனவும் வீடுகளை கொள்ளையடிக்க செல்லும் போது இந்த யுவதிகள் மூவரும் ஆண்கள் போன்று வேடம் பூண்டு செல்வதாகவும் இவர்களின் கொள்ளைக் கூட்டத்திலுள்ள நான்காமவர் ஏற்கனவே பிக்குவாக இருந்து துறவரத்தை கை விட்டவர் எனவும் விசாரணைகளிலி ருந்து தெரியவந்துள்ளது.

 இவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பெண்கள் ஆண் போல் மாறுவேடம் பூண்டு கொள்ளை, 3 யுவதி உட்பட ஒரு பிக்குவும் கைது !  பெண்கள் ஆண் போல் மாறுவேடம் பூண்டு கொள்ளை, 3 யுவதி உட்பட ஒரு பிக்குவும் கைது ! Reviewed by Madawala News on 8/15/2017 11:42:00 AM Rating: 5